Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் உருண்டை.., எப்படி செய்வது?

உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் உருண்டை.., எப்படி செய்வது?

Lankasri News 4 days ago

ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.

இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அந்தவகையில், உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


நாவூறும் சுவையில் மொறுமொறு Fish Fingers.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு- 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • வேர்க்கடலை- ½ கப்
  • வெல்லம்- 1 கப்
  • நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதனை வட்டமாக திரட்டி தவாவை சூடுபடுத்தி தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுட்ட ராகி ரொட்டியை உதிர்த்து அதில் வறுத்த வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நல்லெண்ணெய் சேர்த்து உருண்டையாக பிடித்தால் சத்தான ராகி சிமிலி உருண்டை தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News