Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உக்ரைன் தலைநகரை வேட்டையாடிய ரஷ்ய வான்வழி ஆயுதங்கள்: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகரை வேட்டையாடிய ரஷ்ய வான்வழி ஆயுதங்கள்: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Lankasri News 2 weeks ago

க்ரைனிய தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிக பயங்கரமான வான்வழித் தாக்குதலை முன்னெடுத்ததில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்

உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நேற்றிரவு ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் கீவ்வின் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


தென்னாப்பிரிக்காவில் சாலையில் கவிழ்ந்த பேருந்து: 16 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

தலைநகர் கீவ் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இது மிகவும் மோசமான மற்றும் மிகப்பெரிய தாக்குதல் என்று அந்நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்கள்

இந்த தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா ஒரே நாள் இரவில் கிட்டத்தட்ட 570 வான்வெளி ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.

அதில், 500 ஆளில்லா ட்ரோன்கள், 24 இஸ்கந்தர் வகை பாலஸ்டிக் ஏவுகணைகள், 50 குரூஸ் ஏவுகணைகள் அடங்கும்.

மேலும் கப்பல்களை அழிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 4 சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News