Dailyhunt
உலகில் தூய்மையான குடிநீரை கொண்டுள்ள நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

உலகில் தூய்மையான குடிநீரை கொண்டுள்ள நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

Lankasri News 3 weeks ago

லகில் தூய்மையான குடிநீர் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 144வது இடத்தில் உள்ளது.

தூய்மையான குடிநீர்

மனிதர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து உயிரனங்களுக்கும் நீர் இன்றியமையாத தேவையாக உள்ளது.

உலகம் முழுவதும் நீரின் தரத்தை பாதுகாக்க, அந்தந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இயற்கை நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, நவீன சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு' (EPI) என்பது தூய்மையான குடிநீர்தரத்தை உலகளவில் மதிப்பிட முக்கியமான ஒன்றாகும்.


உலகின் மிகவும் சுத்தமான நாடு: வெளிப்பட்டுள்ள இரகசியம்

இதன்படி, Heath Metrics And Evaluation என்ற நிறுவனம் உலகளவில் தூய்மையான நீரை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

144வது இடத்தில் இந்தியா

இதில், 100 மதிப்பெண்களுடன் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

இதே போல் 100 மதிப்பெண்களுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், கிரீஸ் 3வது இடத்திலும், அயர்லாந்து 4வது இடத்திலும், இத்தாலி 5வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 6வது இடத்திலும், பிரித்தானியா 7வது இடத்திலும், அமெரிக்கா 8வது இடத்திலும் உள்ளது.

99.9 மதிப்பெண்களுடன் நார்வே 9 வது இடத்திலும், 99.8 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 10 வது இடத்திலும் உள்ளது.

இதில், இந்தியா 25.5 மதிப்பெண்களுடன் 144வது இடத்தில் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News