Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

Lankasri News 6 hrs ago

Pressure area forming over andaman sea- வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் கூறுகையில்..,

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.

மேலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News