பலருக்கும் முடி மென்மையாக இல்லாமல் வறண்டு காணப்படும்.
இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலை மென்மையாக மாற்றலாம்.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற உதவும் இயற்கை ஹேர்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது ?
தேவையான பொருட்கள்
- கற்றாழை ஜெல்- 1 கப்
- தயிர்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் கற்றாழையை எடுத்து நன்கு கழுவி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து மென்மையாக வரும்வரை கைவிடாமல் நன்கு கலக்கவும்.

இப்போது இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலை முதன் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்யவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இந்த இயற்கை பேக்கை முடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி மென்மையாக மாறும்.

