Beetroot face packs to brighten skin naturally- சருமத்தைப் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
1. தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- தயிர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் கெட்டியான தயிரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- எலுமிச்சை- 1
எப்படி பயன்படுத்துவது?
பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலக்கவும்.
முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
பின் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொள்ளலாம்.

