Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்

வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்

Lankasri News 2 days ago

Cm vijay carry vs babu body in Funeral procession: வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கில், முதல்வர் விஜய் அவரது உடலை தோளில் சுமந்து சென்றார்.

வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவெகவை சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, நேற்று மாரடைப்பால் மருத்துவமனையிலே காலமானார்.

நேற்று இரவு பெரம்பூரில் உள்ள வி.எஸ்.பாபுவின் வீட்டிற்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய், வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தற்போது திருவிக நகர் மின் மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


ராஜபக்ஷேவை போல் முதல்வர் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் வி.எஸ்.பாபுவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.

முதல்வர் விஜய் தவெக கொடி போர்த்தப்பட்ட வி.எஸ்.பாபுவின் உடலை வீட்டிலிருந்து இறுதி ஊர்வல வாகனம் வரை தனது தோளில் சுமந்து சென்றார்.

அதன் பிறகும், வாகனத்தின் பின்னே முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் நடந்து செல்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News