Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுவா?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதுவா?

Lankasri News 2 weeks ago

மிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியில் இன்ஸ்டாகிராம் பங்காற்றியதை அரசியல் நிபுணர்கள் கவனித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மேடைப்பேச்சுகள், போஸ்டர்கள், தெருமுனை கூட்டங்கள் பாணியில் பிரச்சார உத்திகளை கையாள்வது வழக்கம்.

ஆனால், 2026 சட்டசபை தேர்தலில் தவெக தரப்பில் இளம் தலைமுறை கையில் எடுத்ததோ செல்போன் செயலி.

ஆம், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புதிய அலையை தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.

Virtual ஆயுதம் என்று கூறப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலில், தவெக சார்பு இளைஞர்கள் தங்களது அரசியலை பேசி, டிஜிட்டல் பரப்புரையும் செய்தனர். இது ஒட்டுமொத்த இளைஞர்கள் இடையேயும் அரசியல் ஆர்வத்தையும், புரிதலையும் தூண்டியது.

குறிப்பாக 18 முதல் 25 வயது இளைஞர்கள் (Gen Z Kids) தங்களது தனி உலகமாக கருதும் இன்ஸ்டாகிராமில் அரசியல் பேசினர்.

இந்த செயலில் உள்ள ரீல்ஸ் கலாச்சாரம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.

ஒரு நிமிட ரீல்ஸ் மூலமாக உலக நடப்புகளை தெரிந்து கொள்ளும் இந்த தலைமுறையிடம் நீண்ட பேச்சு என்பது எடுபடாது என்பதை தவெக மிக சரியாக கணித்தது.

கருத்துருவாக்க கருவியாக மாறிவிட்ட இன்ஸ்டாகிராமினை தமிழக வெற்றிக் கழகம் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. பேஸ்புக் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகம் என்ற தளமாக அறியப்பட்டது.

ஆனால், தற்போது Gen Z இளைஞர்களைப் பொறுத்தவரை பேஸ்புக் வயதானவர்கள் பயன்படுத்தும் தளம்; எக்ஸ் தளம் என்பது அரசியல் விவாத தளமாக மாறிவிட்டது. ஆகையால் இன்ஸ்டாகிராம் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளோடு இணைந்த தளமாக உள்ளது.

அதனால், வீட்டில் இருக்கும் பெற்றோரிடம் 'இம்முறை விஜய்க்கு வாக்களியுங்கள்' என்று வற்புறுத்தும் சக்தியாக இளைஞர்கள் மாறினர். சிறுவர், சிறுமியர்களும் தங்கள் வீட்டு பெரியவர்களிடம் மன்றாடும் காணொளிகளும் வெளியாகின.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News