Wednesday, 30 Dec, 8.30 pm Lifeberrys Tamil

செய்திகள்
இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு?

ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு... உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா காரணமாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று இரவு, நாளை, நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 31-ம் தேதி மற்றும் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறும் கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், நாடு முழுவதும் பலருக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தேவைப்படும்பட்சத்தில் இன்று இரவு, நாளை, நாளை மறுநாள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Lifeberrys Tamil
Top