Saturday, 11 Jul, 5.00 pm Lifeberrys Tamil

செய்திகள்
நாட்டில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25- முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கினால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டன. இதனால் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் 7வது எஸ்பிஐ மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பிப்ரவரி 2019 முதல், ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Lifeberrys Tamil
Top