Dailyhunt
ஆட்சி அமைப்பதில் சிக்கல்!.. அதிமுக-வுடன் கைகோர்க்கிறாரா விஜய்? எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் தவெக முக்கிய புள்ளி!

ஆட்சி அமைப்பதில் சிக்கல்!.. அதிமுக-வுடன் கைகோர்க்கிறாரா விஜய்? எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் தவெக முக்கிய புள்ளி!

மிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

ஆனாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கலில் உள்ள தவெக-விற்கு மேலும் 11 வேட்பாளர்களின் ஆதரவு தேவைபடுகிறது. விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் MLA பதவியை ராஜினாமா செய்கிறார். அதனால் பெரும்பான்மை 107 ஆக உள்ள நிலையில் ஆட்சி அமைக்க இன்னும் 11 சீட் தேவைபடுகிறது. அடுத்தபடியாக உள்ள திமுக 59 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சியாக அமர முடிவு செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள அதிமுக 47 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், விஜய்-க்கு ஆதரவு அளிக்கும் முக்கிய இடத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எடுக்கும் கூட்டணி முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. காரணம் அதிமுக தற்போது NDA கூட்டணியில் உள்ளது. அதனை தொடர்ந்து அதிமுகவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துமா தவெக? என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தற்போது தவெக-வின் முக்கிய புள்ளியான ஆனந்த், இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அதிமுக வெற்றி வேட்பாளர் சிவி சண்முகம், " தவெக உடனான கூட்டணியை தலைமையே முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவரை சந்திக்க கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வந்துள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி பற்றியதா என்பது குறித்து கேள்விகள் எழுந்துவருகிறது. மேலும் திமுக கூட்டணி கட்சிகளும் அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal