சர்க்கரை விலை ஏற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் முட்டை விலை ஏற்றத்துக்கும் எத்தனால் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறும் தரவுகள் வெளியாகியிருக்கின்றன.
எத்தனால் உற்பத்தி காரணமாக மக்காச்சோளத்தின் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இந்தக் குளிர்காலத்தில் விலை மேலும் உயரும் என கோழிப்பண்ணைத் துறை நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC), கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி முட்டை விலை ஏற்றம் 40% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது முட்டையின் பண்ணை விலை 7 ரூபாயாக இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் முட்டையின் சில்லறை விலை 8.50 முதல் 9 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு சில்லறை விலையே 7 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
NECC கூறுவதன்படி, பண்ணை கோழிகளுக்கு கொடுக்கப்படும் முக்கிய உணவுப் பொருளாக மக்கா சோளம் உள்ளது. கோழி வளர்ப்புக்கு ஆகும் செலவில் 65-70% தீவனத்துக்கான செலவீனம்தான்.
இந்த ஆண்டு மக்கா சோளம் அறுவடையில் பெருவாரியான பங்கு எத்தனால் வடிப்பாலைகளுக்கு (Ethanol Distilleries) செல்வதானால் கோழிப்பண்ணைக்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது. இருப்பை விட தேவை அதிகரித்திருப்பதானால் மக்கா சோளத்தின் விலை ஏறியிருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டன் மக்கா சோளம் 14,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை 26,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டுமே 2500 ரூபாய் உயந்திருக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC)இந்தியாவில் எத்தனால் உற்பத்தி செய்ய மக்கா சோளமும், கரும்புமே முக்கிய மூலப் பொருட்களாக இருக்கின்றன. 20% எத்தனால் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களின் விலைஏற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒப்பீட்டளவில் பெட்ரோல் தயாரிப்பு விலை குறைவாகவே இருக்கும். ஆனால் அந்த விலைக் குறைப்பு சில்லறை பெட்ரோல் விற்பனையில் எதிரொலிக்கவில்லை. மாறாக பல்வேறு காரணங்களால் பெட்ரோல் விலை மென்மேலும் ஏறிக்கொண்டே இருக்கிறது.
அதேநேரத்தில் கரும்பு மற்றும் மக்கா சோளம் போன்ற விவசாய மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அடிப்படை அன்றாட தேவைகளின் விலை கடுமையாக ஏறிவருக்கிறது.
நாடாளுமன்றத் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தி சுமார் 43.4 மில்லியன் டன்களாகும். இதில் கிட்டத்தட்ட 17 மில்லியன் டன்கள் தற்போது எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு, 2022-ல் 1 மில்லியன் டன்களுக்கும் குறைவாக இருந்து, 2024-ல் 6 மில்லியன் டன்களாகவும், தற்போது 17 மில்லியன் டன்களாகவும் கடுமையாக அதிகரித்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் டன்களை எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
EGGஇந்தியாவின் மக்காச்சோள உற்பத்தியில் சுமார் 60 சதவீதத்தை கோழி வளர்ப்புத் துறை பயன்படுத்துகிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்களும் இதில் போட்டியாளர்களாக இணைந்துள்ளதால் கோழிப் பண்ணைகள் திணறி வருகின்றன.
எக்கானாமிக்ஸ் டைம்ஸ் தளத்தின் செய்தி அறிக்கையின்படி, மக்காச்சோளப் பற்றாக்குறையைத் தாண்டி, வெப்ப அழுத்தம், இறப்பு விகிதங்கள், வானிலை சீர்குலைவுகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் தீவனப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கின்றன.
முட்டை, சர்க்கரை மட்டுமல்லாமல் சமீப காலத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் வெங்காய விலை 45 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த பதினைந்து நாட்களில் வெல்லத்தின் விலை சுமார் 25% உயர்ந்து, ஒரு கிலோவின் சராசரி சில்லறை விலை ரூ.65 ஆக அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 15% உயர்ந்து, ஒரு லிட்டரின் சில்லறை விலை ரூ.200-ஐத் தாண்டியுள்ளது.
நாடே விலை ஏற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது. மத்திய அரசு இந்த போக்கை நிறுத்த ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கரப்பான் பூச்சி பால்: பசும்பாலை விட சாத்தானது! எதிர்காலத்தில் இதைத்தான் சாப்பிட வேண்டுமா?
PK Mahanty love story1975-ம் ஆண்டின் பிற்பகுதியில்,PK-விற்கு 26 வயதாக இருந்தபோது, அவர் டெல்லியில் நுண்கலை படித்துக்கொண்டிருந்தார். அவர் ஒடிசாவின் கந்தபடா கிராமத்தில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தார். டெல்லியில் நுண்கலை படிப்பதற்காக கல்வி உதவித்தொகை பெற்ற அவர், நகர மையத்தில் உள்ள ஒரு நீரூற்றுக்கு அருகில் உருவப்படங்களை வரைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.
அவரது திறமையைப் பற்றி ஒரு உள்ளூர் செய்தித்தாள் கட்டுரை கூட வெளிவந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் லோட்டா அங்கு வந்துள்ளார். அப்போது லோட்டாவிற்கு 20 வயது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது மூன்று நண்பர்களுடன் ஒரு ஃபோக்ஸ்வேகன் வேனில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்காக வந்தபோதே PK லோட்டாவால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் முதல் பார்வைக்கும் காதல் என்ற உணர்விற்கும் மட்டும் இந்த பங்கு இருந்தது என்று கூறிவிட முடியாது, விதிக்கு முக்கியத்துவம் உண்டு என்று அவரது குடும்பத்தினர் அவரிடம் எப்போதும் கூறி வந்துள்ளனர்.
ஒரு ஜோதிடர் ஒருமுறை PK-வின் தந்தையிடம், அவரது வருங்கால மனைவி தொலைதூர தேசத்திலிருந்து வருவார் என்றும், அவர் இசைத் திறமை கொண்டவராக இருப்பார் என்றும், ரிஷப ராசியில் பிறந்திருப்பார் என்றும், மேலும் "ஒரு காட்டிற்குச் சொந்தக்காரராக" இருப்பார் என்றும் கூறியுள்ளதாக பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. லோட்டா இந்தியா திரும்பியதும், PK லோட்டாவின் பிறந்தநாளைப் பற்றிக் கேட்டுள்ளார். அவரும் மே மாதத்தில் பிறந்தவர் மற்றும் ரிஷப ராசிக்காரி என்பதை உறுதிசெய்துள்ளார். மேலும், அவர் இசைத் திறமை கொண்டவரா? என்று PKகேட்டுள்ளார். லோட்டவோ பாடல் பாடுவதோடு பியானோவும் வாசிப்பதாக கூறியுள்ளார். பிறகு, மிகவும் விசித்திரமான ஒரு கேள்வி ஒன்றினை PK லோட்டாவிடம் கேட்டுள்ளார். அவருக்கு சொந்தமாக ஒரு காடு இருந்ததா? இதுதான் அந்த கேள்வி. லோட்டா குழப்பமடைந்துள்ளார். ஆனால், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபுவான லோட்டாவின் தாத்தாவிற்கு, கோத்தன்பர்க்கிற்கு அருகில் நிலமும் ஒரு காடும் சொந்தமாக இருந்ததாக பின்னர் அவர் விளக்கியுள்ளார். PK-விற்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவரே தன் மனைவியாகப் போகிறார் என்று அவரிடம் தன் காதலை கூறியுள்ளார். பல உரையாடல்களுக்குப் பிறகு, அவருடன் ஒரிசாவுக்குச் செல்ல லோட்டா சம்மதித்துள்ளார்.
133 days journeyஇவரை சந்திப்பதற்கு முன்பு, லண்டனில் லோட்டா செவிலியராகப் பணிபுரிந்தபோது, ஒடிசாவின் 13-ஆம் நூற்றாண்டு கோனார்க் சூரியக் கோயிலின் பிரம்மாண்டமான கல் சக்கரம் இடம்பெற்றிருந்த ஒரு நாட்காட்டியை அவர் பெற்றுள்ளார். அதே புகைப்படம் PK-வின் வீட்டிலும் இருந்துள்ளது. இதைக்கண்டு அவர் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானார். பின்னர், லோட்டா தனது வாழ்க்கைத் துணையைச் சந்தித்துவிட்டதாகத் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் இருவரின் திருமணமும் பழங்குடியின முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து லோட்டா தனது படிப்பை தொடர ஸ்வீடன் செல்லவேண்டி இருந்தது. அதனால், தன் காதல் கணவரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது ஊரை நோக்கி சென்றார். ஆனால், காதல் மனைவியை பிரிந்திருக்க PK-வால் முடியவில்லை. தலைவியை பிரிந்த தலைவன் பசலைநோயால் ஆட்கொள்ளப்பட்டதை போல் காதலின் பிரிவில் இருந்துள்ளார் PK. மேலும், கடிதங்கள் வழியாகவே இருவருக்குமான காதல் அன்றைய பொழுதுகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. பின்னர், மனைவியிடம் செல்ல வேண்டும் என்ற PK-வின் எண்ணம் மட்டும் உறங்கவே இல்லை.
"ஸ்வீடனுக்கு விமானத்தில் செல்ல பயணச்சீட்டின் விலை எவ்வளவு ஆகும்?" என்று விசாரித்தபோது அது ரூ. 40,000 ஆகும் என்று தெரியவந்துள்ளது. அன்றைய பொழுதில் அது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்பட்டது. இதனால், 1977 ஜனவரி அன்று ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தன் காதலியை காண புறப்பட்டார். அந்நியர்களின் உபசரிப்பாலும், அவர்களுக்கு செய்த உதவிகளின் பிரதிபலிப்பால் கிடைத்த ரயில் டிக்கெட்டுகள், அவர்களின் கலை ஆர்வத்தால் அவர்களை வரைந்தது என்று பல்வேறு நிகழ்வுகள் ஒரு அழகிய காதல் புத்தகத்தை படிக்கும் உணர்வை இவரின் வாழ்க்கை பக்கங்கள் ஒவ்வொன்றும் கொடுக்கிறது. இவரது பயணம் சாதாரணமானதாக இல்லை. இருந்தாலும், அது அந்நியர்களால் அழகாக ஆக்கப்பட்டது. மேலும், அவரது கலை அவருக்கு கை கொடுத்ததோடு அது அவருக்கு பணத்தையும் சம்பாதிக்க உதவியது.
Indian Swedish coupleஇறுதியாக அந்த கடின பயணம் ஒரு இளைப்பாறுதலை தந்தது. ஆம்! இறுதியாக 133 நாட்களுக்கு பிறகு, தனது காதலியின் இடமான கோத்தன்பர்க்கிற்கு சென்றடைந்தார். நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாவில்லை. PK-வோ தனது மனைவியை ஆரத்தழுவி அணைத்து நெடுநேரம் அழுதுள்ளார். பின்பு, லோட்டா தனது பெற்றோருக்கு தனது ஆசை கணவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் ஸ்வீடிஷ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, PK ஸ்வீடிஷ் மொழியை கற்றுக்கொண்டு அந்த நாட்டிலேயே கலை ஆசிரியரானார். லோட்டா இசை கற்பிக்க தொடங்கினார். இந்தத் தம்பதியருக்கு 1985-ல் பிறந்த எமிலி மற்றும் 1988-ல் பிறந்த கார்ல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ஒரு அழகான காட்டிற்கு நடுவே, அமைதியான ஒரு கிராமத்தில் இவர்கள் 50 வருடங்களை தாண்டி அதே காதலோடு வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஒரு சாதாரண வரைபடக்கலை மாணவனாக இருந்து அங்கு பார்த்த வெளிநாட்டு பெண் மீது காதல் கொண்டு, சொற்ப பணத்துடன் கண்டம் விட்டு கண்டம் சைக்கிளில் சென்று காதலியை கண்ட இவர்களை பார்க்கும்போது எந்த தைரியத்தில் இதில் PR இறங்கி இருப்பார் என்ற கேள்வியை, எழுப்பினாலும் இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கே அதற்கான பதில் தெரியும், அது தான் காதல். காதல் எதுவும் செய்யும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
— Heart Aerospace (@heartaerospace)எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரையில் எரிபொருள் செலவு குறைவு என்பதுடன் எஞ்சின் பராமரிப்பு செலவும் குறைவானது. இதனால் தற்போதைய வணிக விமானங்களுடன் ஒப்பிடுகையில் இஎஸ்-30' (ES-30) விமானத்தின் பயண செலவு 40% குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் புரிந்து கொண்டுதான் யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் கனடா போன்ற சர்வதேச முன்னணி விமான நிறுவனங்கள் இப்போதே இந்த விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
முதலில் குறைந்த மின்சாரத்தையும், குறைந்த பராமரிப்பையும் கோரும் சிறிய ரக விமானங்கள் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?— AAP (@AamAadmiParty)கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சுமார் 100 ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சி (AAP) அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்றனர். பிரதமர் இல்லத்தை அடையும் முன்னரே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, காவல்துறையினர் மனுக்களை காவல்துறை வாகனம் மூலம் பிரதமர் இல்லத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
E20 பெட்ரோல் விவகாரத்தில் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தும், பிரதமர் தரப்பில் பதில் இல்லாததால் நேரிலாவது அவருக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த இந்தப் பேரணி அவசியமாகிறது என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, E20 பெட்ரோலுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடங்கிய இணையவழி மனுவில், சில நாட்களிலேயே 2,33,238 பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
E20 petrol IndiaE20 பெட்ரோல் விவகாரம் - கெஜ்ரிவாலின் 3 கோரிக்கைகள்
பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்கு E20 பெட்ரோல் அல்லது சாதாரணப் பெட்ரோல் (Pure Petrol) ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலின் விலை, சாதாரணப் பெட்ரோலின் விலையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.
பெட்ரோல் விலையைக் கண்டிப்பாக லிட்டருக்கு ₹84-க்குள் வைக்க வேண்டும்.
இதனுடன், E20 பெட்ரோலால் எந்தப் பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறிவருவதையும் கெஜ்ரிவால் கண்டித்துள்ளார்.
"எந்தப் பாதிப்பும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தால், அந்த ஆய்வை வெளியிடுங்கள்" எனக் கேட்டதுடன், "லட்சக்கணக்கான மக்கள் E20 பெட்ரோலால் என்ஜின் சேதம் மற்றும் மைலேஜ் குறைதல் உள்ளிட்ட புகார்களை எழுப்பியுள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப்பிடம் மண்டியிட்டார் மோடி? - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி, டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பணிந்து அமெரிக்காவிடம் இருந்து சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.67 லட்சம் கோடி) மதிப்பிலான எத்தனாலை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதன் சுமையை இந்திய நுகர்வோர் மீது சுமத்தும் வகையில் E20 கொள்கையை உருவாக்கியிருப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?மேலும், இதில் 'மறைமுக வெளிநாட்டு சதி' இருப்பதாகவும் கூறியுள்ளார். இதே கருத்தை பேரணிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார்.
"இந்த E20 கொள்கை அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் வற்புறுத்துவதால், இந்தியா அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது இந்திய விவசாயிகளுக்குப் பதில் அமெரிக்க விவசாயிகளுக்கே லாபம் தரும்" என அவர் கூறியுள்ளார்.
பேரணியாக வந்தவர்களிடம் மனுக்களைப் பெறாதது சர்வாதிகார நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார். அத்துடன், E20 கொள்கையிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் பெரிய அளவில் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறைகூவல் விடுத்துள்ளார்.
Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?
