ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளாசிய 97 ரன்கள், கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளைப் பறக்கவிட்ட இந்தச் சிறுவனின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் உலகின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், வாயடைத்துப் போயுள்ளார். ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கெயிலின் 59 சிக்ஸர்கள் என்ற சாதனையை, வைபவ் இந்த சீசனில் 65 சிக்ஸர்கள் அடித்து முறியடித்துள்ளார். இது எந்த ஒரு டி20 தொடரிலும் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். வைபவ்வின் இந்த அபார ஆட்டத்தைப் பார்த்த கெயில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மிகச்சிறந்த ஆட்டம் வைபவ், நீ ஒரு புதிய சிக்ஸர் மெஷின்" என்று பாராட்டியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 15 இன்னிங்ஸ்களில் 680 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். சராசரி 45.33 மற்றும் ஸ்டிரைக் ரேட் 242.85 என்பது சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக, அவர் எதிர்கொண்ட பந்துகளில் 88.9 சதவீதம் ரன்கள் பவுண்டரிகள் மூலமாகவே வந்துள்ளது. ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை நான்கு முறை அடித்த வீரர் என்ற கெயிலின் சாதனையை வைபவ் சமன் செய்துள்ளார். இந்த சீசனில் மட்டும் மூன்று முறை அவர் இத்தகைய சாதனையைப் புரிந்து, இந்த மைல்கல்லை எட்டிய முதல் பேட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இளம் வீரரான வைபவ், இலங்கையின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவின் பவர் பிளே சிக்ஸர் சாதனையைத் தகர்த்ததுடன், ஒரே சீசனில் பவர் பிளேயில் அதிக ரன்கள் (490) குவித்த வீரராகவும் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு டேவிட் வார்னர் 2016-ல் 467 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பேட்டரும் 600 ரன்களைக் கடந்து, 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதில்லை. வைபவ் அந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்து, 600 ரன்களைத் தொட்ட மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
வைபவ் அடித்துள்ள 12 சிக்ஸர்கள், ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 10 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே-ஆஃப் வரலாற்றில், ஜோஸ் பட்லரின் 106 ரன்களுக்குப் பிறகு, ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும். அந்தப் போட்டியில் வைபவ் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 243 ரன்களை எட்டியது.
ஐதராபாத் அணியின் துரத்தலின் போது, ஆர்ச்சர் மற்றும் பர்கர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் அணி 196 ரன்களில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பிற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் மோத உள்ளது. தனது 15 வயதிலேயே இத்தனை சாதனைகளை முறியடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, வருங்கால இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக உருவெடுத்துள்ளான் என்பதில் சந்தேகமில்லை. சதம் அடிக்க சில அங்குலங்களில் தவறியபோதும், கெயில் சொன்னது போல, அவன் விரைவில் அந்த இலக்கையும் அடைவான் என்பதில் ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கை உள்ளது.
பராக் எப்போதும் யோசித்து நிதானமாக முடிவெடுப்பதை விட, உள்ளுணர்வுப்படி (Instinct) முடிவெடுக்கும் கேப்டன். மும்பை அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சரை பவர் பிளேயிலேயே வீச வைத்தது அவரது துணிச்சலான முடிவுதான். அதேபோல் ரவி பிஷ்னோய்க்குப் பதில் யாஷ் ராஜ் புஞ்சாவை இறக்கியது எனப் பல தந்திரங்கள் அவருக்குக் கைகொடுத்தன. புதன்கிழமை நடைபெறப்போகும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் போது, பராக் தனது கேப்டன்சியின் உச்சக்கட்டத் தேர்வைச் சந்திக்கிறார்.
இந்தப்போட்டியில் ஆர்ஆர் அணி தோல்வி அடைந்தால்,பராக்கின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். ஒரு பெரிய அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, குறிப்பாக முந்தைய கேப்டன் சாம்சனைப் போல ஒரு பெரும் பிம்பத்தை மாற்றும் போது அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருக்கும். தோல்வி ஏற்பட்டால் பல மாத உழைப்பு வீணாகிவிடும், எனவே இந்த எலிமினேட்டர் போட்டி பராக்கின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியமான சோதனைக் களமாகும். வெற்றி பெற்றால் 2008-க்குப் பிறகு முதல் கோப்பையை நோக்கி அவர் ஒரு அடி முன்னேறுவார், தோற்றால் விமர்சனங்கள் அவரை மேலும் துளைக்கும்.

