இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் செயல்பட்டு வரும் கல்லூரி தொடர்பாக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். கல்லூரியின் செயல்பாடுகள், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அவர் கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கல்லூரி தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வி.எஸ்.பாபு, கல்லூரியின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனிடையே, முந்தைய ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, இந்த கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த படிப்பகத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி தொடர்பாக மேலும் சில கேள்விகளும் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டன.
மகாமகம் விழா குறித்து கேள்வி
இதற்கிடையே, 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், மகாமகம் விழாவிற்கான ஏற்பாடுகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விழாவுக்கான முன்னேற்பாடுகளை விரைவாக தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அமைச்சர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "அமைச்சர் கேள்வி கேட்கக்கூடாது" என தெரிவித்தார். அதே நேரத்தில், அமைச்சர்என்ற முறையில் அல்லாமல், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வினோத் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
உலகமே வியக்கும் வகையில் மகாமகம்
இதனைத் தொடர்ந்து மகாமகம் விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழாவுக்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சருடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருடன் கூட்டம் நடத்தி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மகாமகம் விழாவை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் விழா உலகமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். இதனால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்கல்லூரி தொடர்பான கேள்விகள் முதல், 2028 மகாமகம் விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவையில் அமைச்சரே கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட சலசலப்பு வரை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த விவகாரங்கள் கவனம் பெற்றன.
— இரா.செல்வேந்திரன் திமுக (@selvadmk96)யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!
பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு!
கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!
எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.
பூண்டி கலைசெல்வன் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.
2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.
அண்ணனின் இடத்துக்கு வந்த கலைவாணன், கலைஞரின் இடத்தை நிரப்பினார்!
கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.
கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.

2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.
ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.
ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.
2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.

49 வழக்குகள், குண்டர் சட்டம், அடங்காத ஆதரவாளர் படை!
ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.
பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.

தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெக vs திமுக: பேரவையில் நீடித்த பதட்டம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரண்ட திமுக! — ANI (@ANI)எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.
கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் தவெக... விஜய் பிரதமர்?
கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.
அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
