சிவகார்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் பிரதீப் ஆண்டனி. அருவி படத்தில் குணசித்திர பாத்திரமாக கவனம் ஈர்த்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்திருந்தார்.
இவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் பிரதீப். அதில் தங்களது பிரிவுக்கான காரணம் மற்றும் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், "என் நண்பர்களிடம் இந்தக் குழந்தையை விற்றுவிடலாம் என்று நான் பலமுறை விளையாட்டாகப் பேசியிருக்கிறேன். ஒரு குழந்தையைப் பொறுப்போடு வளர்க்கும் அளவுக்கு நான் பக்குவமில்லாதவன் என்று நினைத்தேன்.
அதனால் பூஜா கர்ப்பமானபோது, பிறக்கப்போகும் குழந்தையை வாங்க முன்பதிவு செய்துகொள்ளுமாறும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் தருமாறும் பலரிடம் கேட்டேன். ஆனால் அந்தக் குழந்தை இந்த உலகத்திற்கு வந்த பிறகு, எனக்கு அதன் மீது ஒருவிதப் பாசம் ஏற்பட்டுவிட்டது.
அது நான் சொல்வதை மகிழ்ச்சியோடு கேட்கும். என் கைகளில் ஒரு உயிர் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை உணரும்போது ஒவ்வொரு நாளும் எனக்குப் புதிதாக இருந்தது. ஆனால் இப்போது என் குழந்தை என்னிடம் இல்லை.
அந்தக் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணத்தை நான் அனுபவித்து ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே நான் அந்தக் குழந்தையை விட்டுக்கொடுத்துவிட்டேன். ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க வேண்டும், சிறந்த அப்பாவாக இருக்க வேண்டும், நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நல்ல சூழலை என் குழந்தைக்குத் தர வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். ஆனால் அதில் தோற்றுவிட்டேன். நீங்கள் எதை அதிகமாகப் பயப்படுகிறீர்களோ, அதையே ஈர்க்கிறீர்கள் என்பதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்; அதுதான் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை ஒரு மோசமான மனிதனாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
என் உலகத்தின் பகுதியாக இல்லாத, அதை என்றைக்குமே புரிந்துகொள்ளாத அல்லது அதில் ஒரு அங்கமாக இருக்க முயற்சி செய்யாத ஒருவருக்குப் பக்கத்தில்தான் நான் தினமும் காலையில் விழித்துக்கொண்டிருந்தேன்.
அவள் இன்னும் தன் குடும்பத்துடனும் தன் வாழ்க்கையுடனும் சிக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் நான் ஒருவரின் வாழ்க்கையை அழிப்பது போல உணர்ந்தேன்.
மற்றொரு நபருடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. இரண்டு எதிரெதிர் துருவங்கள் மோதிக்கொண்டு, அவர்கள் இயல்பான தன்மைக்காகவே ஒருவரை ஒருவர் வெறுப்பது போல இருந்தது.
அது எங்கள் இருவருக்குமே அநீதியாகத் தோன்றியது. எனது முந்தைய உறவால் நான் பலவீனமாக இருந்தேன்.
அந்தப் பலவீனமான தருணத்தில் எங்கிருந்து அன்பைப் பெற முடியுமோ அதைப் பிடித்துக்கொண்டேன். இந்த நிமிடம் வரை அதற்கு உண்மையாகவும் இருந்திருக்கிறேன்.
ஆனால் அது எனக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. என்னுடைய பலவீனமும் அன்புக்காக நான் ஏங்கியதும். இந்தத் திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்ல நான் முடிவெடுத்துவிட்டேன். ஒருவரையொருவர் வெறுக்கும் சண்டையிடும் பெற்றோருடன் இருப்பதைவிட, அந்தக் குழந்தை அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன்.
ஏனென்றால் இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. அதோடு அவளும் இனி என்னை நேசிக்கிறாள் என்று நான் நினைக்கவில்லை.
எது எப்படியோ, இன்று நான் அந்தக் குழந்தையை மிகவும் நினைத்துப் பார்த்தேன். அதற்கு ஒரு பெயர்கூட என்னால் வைக்க முடியவில்லையே.
இப்போது என் உணர்வுகளைப் பொதுவெளியில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது குறித்து எனக்கு வரிசையாக அழைப்புகள் வரும்.
என் உணர்வுகளை வெளிப்படுத்தவிடாமல் என்னை அமைதிப்படுத்தவே மனிதர்கள் அழைப்பார்கள். ஆனால் பேசுவதற்கு எனக்கு உண்மையிலேயே யாருமில்லை. என்றென்றும் அனாதையாக இருப்பதே என் சாபம் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டேன், நான் அப்படித்தான்.." எனக் கூறியிருக்கிறார்.
"சிகரெட் இல்லை.. மூலிகை புகை" - மூக்கில் புகையை இழுத்த நடிகை ஷெனாஸ்.. வைரலாகும் ஆயுர்வேத சிகிச்சை!- Arun Raj (@Arunraj03)குறைந்த இருக்கைகள் உள்ள பேருந்தில் ஏறி அமர போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் காற்று வராத இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வியர்வையில் குளித்தும் யாரும் பேருந்தை விட்டு இறங்காததால், அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அடுத்த சுற்றில் கொஞ்சம் நாற்காலிகளைப் போட்டு, அதில் அமருவதுதான் போட்டி என அறிவித்தார்கள். நாற்காலிக்காக போட்டியாளர்கள் மீண்டும் அடித்துக்கொள்ளத் தொடங்கினர். போட்டியாளர்கள் சிலர் சீரியஸாகச் சண்டையிடவும் செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளும்தான் தற்போது மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
poverty porn: சாமானியன் என்றால் கேவலமா?
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களின் சண்டைகளையும், மன ஓட்டங்களையும், உரையாடல்களையும் அப்பட்டமாக ஒளிபரப்புவது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன.
Bigg Boss The Common Manஇந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் தி காமன் மேன் சாமானியர்களின் சுய மதிப்பீட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து, "செலபிரிட்டியாக இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பார்களா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
உதாரணமாக, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் என்பவரின் சேனலில் ஏழையாக இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க போட்டிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவரிடம் ஏதோ ஒன்று (பொதுவாக பணம்) இல்லை என்பதற்காக குறைபட்டுக்கொள்வதையும், அதை வழங்க போட்டிகள் நடத்தி கண்டு களிப்பதையும் "poverty porn" என்பர். இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Mr Beastகுறிப்பாக, அவர்களைப் போன்ற எல்லா சாமானியர்களும் தங்களது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் பழக்கம் ஏற்படும்.
அதேபோல, இந்த பிக் பாஸ் தி காமன் மேன் போட்டி பிரபலமின்மையைச் சாமானியர்களுக்கு எதிரான கருவியாக்கி, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கி, காட்சிப்பொருளாக மாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சமூக வலைத்தளக் காலகட்டத்தில் பிரபலமாக இருப்பதற்கான போட்டி ஒவ்வொரு நபரிடமும் இருப்பதைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய சுரண்டலில் ஈடுபடுகின்றன.
பிரபலத்துவம் என்பது ஏதோ ஒரு துறையில் முழுமனதாகச் செயல்பட்டு வெற்றி அடைவதனால் கிடைக்கும் புகழ் வெளிச்சம் என்பதைத்தாண்டி, ஏதோ ஒரு வகையில் பிரபலமாக இருப்பதையே குறிக்கோளாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எவ்வளவோ கடினமான போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தம்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களும் சாமானியர்கள்தான் என்னும்போது, நேரடியாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டும் போட்டிகளை நடத்துவது எந்த வகையான முன்னுதாரணமாக அமையும்?
நடுவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் அத்தனையையும் பார்த்த மக்கள், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கண்ணியமான போட்டிகளை நடத்தக் கூடாதா?" என்ற கேள்வியையே எழுப்பியுள்ளனர்.
மொத்தம் 22 எபிசோடுகள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி இனியாவது கண்ணியமான முறையில் நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்!- Star Talkies (@startalkies_ofl)ஏற்கெனவே, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய பொதுமக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே அழைத்து 'காமன் மேன்' என்ற பெயரில் போட்டி நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மற்றொரு போட்டியாளரான பிரியா வர்ஷினி என்பவர் தன்னை போட்டியின் நடுவர்கள் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாஸ்க்கும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளிலேயே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
Mammootty: நடு இரவில் உதவிய தமிழர்; "நம்ம ஃபிரண்டுதான்" - நெகிழ்ந்த மம்மூட்டி!
