Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பாலியல் வெறி பிடித்த மனநோயாளி!"- நண்பர்களிடம் கதறிய மனைவி.. உடலுறவுக்கு மறுத்ததால் கொலை! பாலியல் மோகத்தால் நடந்த விபரீதம்

"பாலியல் வெறி பிடித்த மனநோயாளி!"- நண்பர்களிடம் கதறிய மனைவி.. உடலுறவுக்கு மறுத்ததால் கொலை! பாலியல் மோகத்தால் நடந்த விபரீதம்

திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், கணவனால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட 35 வயதுப் பெண்ணின் மரணம் குறித்த சோகமான மற்றும் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று தென் கொரியாவில் நிகழ்ந்தது.

யூ ஹே-யங், 10 மாதக் காதலுக்குப் பிறகு, 2024-ம் ஆண்டு டிசம்பரில், அதே வயதைக் கொண்ட பைலேட்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான சியோவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 13 அன்று, சியோலில் உள்ள அவர்களது வீட்டில் அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதல் மனைவியை இவர் கொள்ள காரணம் என்ன?

சியோ தனது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக யூ உயிரிழந்துள்ளார் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், யூவின் மேல் உதட்டில் காயங்களும், கழுத்தைச் சுற்றி சிவப்புத் தழும்புகளும் காணப்பட்டுள்ளன. இவை அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதைக் குறிப்பதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் இருந்தபோதிலும்,சியோ ஆரம்பத்தில் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் மிகுந்த துக்கத்தோடு கலந்துகொண்டுள்ளார்.

மேலும் சியோ, யூவின் குடும்பத்தினரின் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தவிர்த்து, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளார். இதனையடுத்து, காவல்துறை விசாரணையின் போதுதான் மனைவியின் இறப்பிற்கான உண்மை காரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ​​அதாவது, மாதவிடாய் காலத்தில் தனது பாலியல் ரீதியான அணுகுமுறைகளை யூ மறுத்ததால், தனது மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்ததை சியோ ஒப்புக்கொண்டார். மேலும், புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சியோவுக்கு நீண்ட காலமாக பாலியல் மீது ஒருவித மோகம் இருந்து வந்ததுடன், தன் மனைவி தனது கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்பதில் அவர் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாக புலனாய்வாளர்கள் கூறியிருந்தனர்.

தனது மனைவியின் மறுப்பால் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதுவே இந்தக் கொடிய தாக்குதலுக்குக் காரணமாக அமைந்தது என்றும் சியோ காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். யூவுக்கு உடல்நலக் கோளாறுகள் இருந்தபோதிலும், சியோவின் தொடர்ச்சியான பாலியல் வற்புறுத்தல்களின் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோதிலும், சியோவிடமிருந்து தொடர்ந்து பாலியல் ரீதியான அழுத்தம் இருந்து வந்துள்ளது. யூவின் காயங்கள் முழுமையாகக் குணமடைவதற்கு முன்பே, சியோ உடலுறவை வற்புறுத்தியதால் யூவிற்கு ஏற்பட்ட கோபத்தை அவரது கைப்பேசியில் இருந்த செய்திகள் வெளிப்படுத்தின. அவர் இறப்பதற்கு ஒருமாதம் முன்பு, யூ தனது கணவரை ஒரு "பாலியல் வெறி பிடித்த மனநோயாளி" என்று வர்ணித்து, அவரைத் திருமணம் செய்ததற்காக வருந்துவதாகவும், விவாகரத்து கோர விரும்புவதாகவும் அவரது நண்பர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சியோ தனது பாலியல் மோகம் குறித்து யூவின் சகோதரியிடமும் பேசியுள்ளார், "என் மனைவியுடன் என்னால் உடல்ரீதியான நெருக்கம் கொள்ள முடியாவிட்டால், நான் வேறு இடத்திற்குச் சென்று அதற்காகப் பணம் கொடுக்க வேண்டுமா?" என்று கூறியதை யூவின் மூத்த சகோதரி நினைவு கூர்ந்தார்.

யூ இறந்த அன்று அதிகாலை வேளையில், யாரோ இழுத்துச் செல்லும் சத்தம் மற்றும் ஒரு பெண் மூச்சுவிடத் திணறுவது போன்ற அசாதாரணமான சத்தங்களைக் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சாட்சியமும், பிரேதப் பரிசோதனை முடிவுகளும் ஒத்துப்போனதால், காவல்துறையினர் இறுதிச் சடங்கு இல்லத்தில் சோதனை நடத்தி, சியோவை அங்கேயே கைது செய்துள்ளனர். மேலும், சியோ கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார். ஆனால் இன்னும் தனது குற்றத்தை முறையாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal