Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போலி மருந்துகளின் கோரப்பிடி- உச்சக்கட்ட அச்சத்தில் நோயாளிகள்

போலி மருந்துகளின் கோரப்பிடி- உச்சக்கட்ட அச்சத்தில் நோயாளிகள்

பெங்களூருவில் ரூ.4.91 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் இந்திய மருத்துவ உலகை அச்சுறுத்தியுள்ளன.

நோயாளிக்கு அளிக்கப்பட்ட மருத்துகள் அசுத்தம் நிறைந்த பொருட்களால் தாயரிக்கப்பட்டுள்ள செய்தி நோயாளிகளின் இதயங்களை நடுங்க வைத்துள்ளது.

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி டோல்கேட் அருகே உள்ள குருபரகெரனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் உணவுத்துறை ,மருந்து நிர்வாகத்துறை இணைந்து நடத்திய சோதனையின் போது அந்த வீட்டிற்குள் நடந்த போலித்தொழிற்சாலையின் கொடூர முகம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. சட்டவிரோதமாகப் போலி மருந்துகளை மாற்றி அடைக்கும் மற்றும் போலி லேபிள்கள் ஒட்டும் இயந்திரங்கள் இருந்ததோடு கைப்பற்றப்பட்ட மருந்துகளில், எம்பிலாவியோ, ஜாவிசெஃப்டா, செஃப்டிவென்ட், ஜாவிட்டாஸ் மற்றும் ஹிஸ்லாம் உள்ளிட்ட உயர் ரக நுண்ணுயிர் எதிர் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துகளின் போலிப் பிரதிகள் இருந்தது அதிர்சியினை ஏற்படுத்தியது

இந்த போலி மருந்துகளின் மொத்த மதிப்பு 4.91 கோடிக்கும் அதிகம் என தலைச்சுற்றல் தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது மலிவான, தரமற்ற மருந்துகளை மொத்தமாக வாங்கி வந்து, பன்னாட்டு நிறுவனங்களின் அசல் லேபிள்களைப் போல அச்சு அசலாகப் போலியாக அச்சிட்டு, புதிய குப்பிகளில் அடைத்து விற்றுள்ள அக்கிர செயல்கள் பெங்களூரில் மட்டுமல்ல மாநிலத்தைத் தாண்டிய தொடர்புகள் இருப்பதாகத் தெரிவந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இது சம்பந்தமாக ஆறு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு. நான்கு பேர் கைது செய்துள்ளதோடு சந்தேகிக்கப்படும் போலி மருந்துகள் . இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில்உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகவுக்குள் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளுக்கும் இந்த போலி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன என்பதைத் தோண்டித் துருவும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தோண்ட தோண்ட மர்மங்கள் என்பது போல விசாரணையில் இது இந்திய அளைவில் அல்ல சர்வதேச அளவில் ஒரு போலீ கொடூர வலையமைப்பு போல செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தேசத்தை தாண்டி அச்சத்தையும் சந்தேகங்ளையும் விரிவு படுத்தியுள்ளது.

ஒரு மன்னிக்கமுடியாத குற்றம் என்றால்.. விலை உயர்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் என்ற பெயரில் அசுத்தமான அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவுப் பொடிகளும் கலந்த போலித் திரவம் நோயாளிகளின் நரம்புகளுக்குள் செலுத்தப்படுள்ளதாகவும் ஆய்வகச்சோதனைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி கும்பல் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரி துபாயில் பதுங்கியிருந்து இந்த நெட்வொர்க்கை இயக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்றுள்ளது போலி வியாபாரம் அல்ல, அது பல ஆயிரம் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய ஒரு திட்டமிட்ட படுகொலைச் சதி. 4.91 கோடி மதிப்புள்ள விஷ மருந்துகளை செலுத்தி , அடுத்தவன் பிணத்தின் மீது வாழ்வு நடத்தும் ம்னித குல துரோகிகளுக்கு சட்டம் தன் கோர முகத்தை காட்டும் நாள் வெகுதூரமில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal