முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியா பிரிமியர் லீக் (IPL) தொடங்கப்பட்ட 2008 ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயணித்து வருகிறார்.
அணியுடனான தனது இணைப்பை வலிமைபடுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியதும் அதிக ரன்கள் அடித்ததும் தோனிதான். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஒரு அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்துகொள்கிறார்.
தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையிலான உறவு வீரர், முன்னாள் கேப்டன் என்பதையும் தாண்டி ஆழமானது.
Dhoni தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் தோனி, 2026 சீசனில் 4 கோடிக்கு அணியில் தக்கவைக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.
2027 சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25% பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார் தோனி.
ஆனால் இந்த விருப்பத்துக்கு CSK அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 25% வாங்க முற்படும் தோனிக்கு 3% வழங்க அணி நிர்வாகம் முன்வந்திருக்கிறது.
CSK விவாதங்களுக்குப் பிறகு தோனி 18% வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் 5.5% மேல் அவருக்கு விற்க விரும்பவில்லை.
அணி நிர்வாகம் மற்றும் தோனி இடையிலான பேரம் பேச்சு வார்த்தையாக மட்டுமே நடந்ததாகவும் எந்த விதமான அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வமான நடவடிக்கைகளும் இல்லை என செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
தோனி எதிர்காலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார் என்பதே செய்திகள் சொல்லும் கருத்தாக இருக்கிறது. அப்படியெனில் இரண்டு தரப்பும் 5.5% மற்றும் 18% இடையில் ஒரு புள்ளியில் ஒருங்கிணையலாம் அல்லது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.
IND vs SL: மானவ் சூழலில் மடிந்த தீவு நாடு; வெற்றிக்குப் பிறகும் புள்ளிப் பட்டியலில் முன்னேறாதது ஏன்?— Abdul Wasey Naik (@WaseyNaik)அந்த அரசியல் பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இந்த ஹாக்கிப் போட்டியிலும் இது தொடருகிறதா கேள்வி எழுந்தது. ஆனால் முடிவில் இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கி விடைபெற்றனர்.
ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 11-வது நிமிடத்தில் ஃபார்வர்ட் வீரர் அபிஷேக் ஒரு அற்புத ஃபீல்ட் கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது கால்பகுதியில் (21-வது நிமிடம்) மீண்டும் ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றி ஹர்மன்பிரீத் அசத்த, இந்தியா 3-0 என வலுவான நிலையை அடைந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அணி எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. 22-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

24-வது நிமிடத்தில் அபிஷேக் தனது இரண்டாவது கோலை பதிவு செய்ய, அதே நிமிடத்தில் பாகிஸ்தானின் சுஃபியான் கான் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார்.
34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை ஹர்திக் சிங் கோலாக மாற்றினார். போட்டியின் 46-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் மீண்டும் ஒரு கோல் அடித்தாலும், இந்திய டிஃபண்டர்களை தாண்டி அவர்களால் மேலும் கோல்களை அடிக்க முடியவில்லை.
இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடையவில்லை என்ற சாதனையை இந்தியா தொடருகிறது.
இந்த தோல்வியினால் பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது.

