Dailyhunt
காலையில எழுந்ததும் வெறும் வயித்துல தண்ணி குடிச்சா இவ்வளவு நன்மைகளா? உங்க ஆரோக்கியம் இனி உங்க கையில!

காலையில எழுந்ததும் வெறும் வயித்துல தண்ணி குடிச்சா இவ்வளவு நன்மைகளா? உங்க ஆரோக்கியம் இனி உங்க கையில!

காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதற்குப் பதிலாக ஒரு செம்பு அல்லது ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?

இல்லை என்றால் இன்றே அதைத் தொடங்குங்கள். இரவு முழுவதும் உறங்கி எழுந்திருக்கும்போது நம் உடல் ஒருவிதமான வறட்சி நிலையில் இருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது நம் உடலில் உள்ள உறுப்புகளைத் தட்டியெழுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு சூப்பரான விஷயம். குறிப்பாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் குடல் சுத்தமாகிறது. இரவு முழுவதும் செரிமானமான உணவின் கழிவுகள் காலையில் வெளியேற இது பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் (Constipation) பிரச்சனை அறவே நீங்கும். குடல் சுத்தமாக இருந்தால் மட்டுமே நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் முழுமையாகச் சேரும். மேலும், இது உங்கள் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, தோலில் ஏற்படும் பருக்கள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து முகத்தைப் பொலிவாக மாற்றும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு எளிமையான வழி. காலையில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் மெட்டபாலிசம் (உணவு எரிக்கப்படும் வேகம்) 24 சதவீதம் வரை அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வேகமாக எரியும். அத்துடன், தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்குத் தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. உடலில் நீர்ச்சத்து குறையும்போதுதான் தலைவலி வரும், அதைத் தவிர்க்க இது உதவும்.

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கவும், சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுகளை (Infection) நீக்கவும் தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் காலையில் ஒரு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், மெல்ல மெல்லஅந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி, நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal