Dailyhunt
காமராஜர் காலத்திற்குப் பின் ஒரு அதிசயம்! தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. சைலன்ட் மோடில் பாஜக!

காமராஜர் காலத்திற்குப் பின் ஒரு அதிசயம்! தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. சைலன்ட் மோடில் பாஜக!

மிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் எந்த இடமும் கிடைக்காமல் இருந்த காங்கிரஸிற்கு, இந்த முடிவு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகளின் தயவில் சில தொகுதிகளைப் பெற்று வந்த காங்கிரஸ், இன்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு விஜய்யின் கட்சிக்கு காங்கிரஸின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நெருக்கடியான சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவேண்டும் என்ற விஜய்யின் திட்டத்திற்கு காங்கிரஸின் தேசிய முகம் கைகொடுத்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டையில் காங்கிரஸின் குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த அதிரடியான அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக மட்டும் மௌனம் காப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வருகை மற்றும் காங்கிரஸின் இந்த திடீர் எழுச்சி குறித்து எந்தவொரு கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்காமல் பாஜக அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பாஜகவின் பலவீனமா அல்லது திரைமறைவில் அவர்கள் வேறு ஏதேனும் ரகசியத் திட்டத்தை வைத்துள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸின் இந்த கூட்டணி நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்குமா என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும், தற்போதைய சூழலில் இது ஒரு வலுவான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாகத் தேசிய அளவில் காங்கிரஸிற்கு இது ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. அதே சமயம் பாஜகவின் இந்த மௌனம் வரும் காலங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal