Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"கருணை என்ற பெயரில் குழந்தைத் தொழிலா?" - 15 வயது சிறுமி வழக்கில் நீதிமன்றம் அதிரடி முடிவு!

"கருணை என்ற பெயரில் குழந்தைத் தொழிலா?" - 15 வயது சிறுமி வழக்கில் நீதிமன்றம் அதிரடி முடிவு!

ரு குழந்தைக்கு உணவு, உடை, தங்குமிடம் வழங்குவது மனிதாபிமான உதவியாக இருக்கலாம். ஆனால் அதே குழந்தை ஒரு வீட்டில் தொடர்ந்து வேலை செய்து, அதற்காக பணம் வழங்கப்பட்டால் அதை எப்படி பார்க்க வேண்டும்?

உதவிக்கும் குழந்தைத் தொழிலுக்கும் இடையிலான இந்த நுணுக்கமான வேறுபாடுதான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி எதிர்கொண்டுள்ள வழக்கின் மையக் கேள்வியாக மாறியுள்ளது. 15 வயது சிறுமியை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ஆரம்ப நிலையிலேயே ரத்து செய்ய கல்கத்தா உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குழந்தையின் நிலை குறித்து முழுமையான விசாரணை நடைபெறாமல், அது வெறும் உதவி என்று முடிவு செய்ய முடியாது என்பதே நீதிமன்றத்தின் அணுகுமுறையாக உள்ளது.

இந்த சம்பவம் 2022 நவம்பர் மாதத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தைகள் உதவி எண்ணுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து Childline குழுவினர் ஒரு குடியிருப்புக்கு சென்றனர். அங்கு 15 வயது சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்ததாகவும், சிறுமி அவர்களை கவனிப்பதுடன் வீட்டின் பல்வேறு வேலைகளையும் செய்து வந்ததாகவும் விசாரணை தரப்பு தெரிவித்தது. இதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டதாகவும், உணவு மற்றும்தங்குமிடம் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டது. பின்னர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

ஆனால் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி இதற்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளித்தனர். சிறுமியை வீட்டு வேலைக்காக பணியமர்த்தவில்லை என்றும், அவளது குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான பிரச்சினைகளால் தங்குவதற்கு இடமில்லாத சூழலில் தங்களிடம் வந்ததாகவும் அவர்கள் கூறினர். மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாகவும், அவ்வப்போது கொடுக்கப்பட்ட பணம் சம்பளம் அல்ல என்றும் தம்பதி தரப்பில் வாதிடப்பட்டது. வீட்டில் சிறுமி சில பணிகளை செய்திருந்தாலும், அது கட்டாயப்படுத்தப்பட்ட வேலை கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக சிறுமியின் வாக்குமூலங்கள் தொடர்பான முரண்பாடுகள் அமைந்துள்ளன. ஆரம்பகட்ட விசாரணையில் பதிவு செய்யப்பட்ட தகவல்களுக்கும், பின்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்துக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஒரு கட்டத்தில் வீட்டுப் பணிகள் மற்றும் பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் சிறுமி தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வீட்டில் தங்கியிருந்ததாக வேறுபட்ட தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முரண்பாடுகளை தீர்மானிப்பதற்கு சாட்சிகளையும் ஆதாரங்களையும் விரிவாக ஆராய வேண்டியிருப்பதால், வழக்கை தொடக்க நிலையிலேயே முடிக்க முடியாது என்று நீதிமன்றம் கருதியது.

தம்பதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ஒருவரை அடைத்து வைத்தல், மிரட்டல் மற்றும் கூட்டு நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளுடன், குழந்தைகள் தொடர்பான சட்டங்களின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து தங்கள்மீதான குற்றவியல் நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தம்பதி உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் இந்த கட்டத்தில் நீதிமன்றம் அவர்களின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வது சரியானதல்ல எனத் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் பார்வையில், இந்த வழக்கில் இரண்டு முக்கியமான அம்சங்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒருபுறம், குழந்தைகள் சுரண்டல், கட்டாய வேலை அல்லது எந்தவிதமான துஷ்பிரயோகத்திலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். மறுபுறம், குற்றமற்ற நபர்கள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் அவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இந்த இரு நோக்கங்களையும் கருத்தில் கொண்டே குற்றவியல் வழக்குகளை ஆரம்ப நிலையிலேயே ரத்து செய்யும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 'சிறுமிக்கு தங்குமிடம் கொடுத்தோம்' என்ற ஒரே காரணத்தால் வழக்கை முடித்துவிட முடியாது என்பதே இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும். அதேபோல், வீட்டில் குழந்தை இருந்தது அல்லது சில வேலைகளை செய்தது என்பதைக் கொண்டு மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் கருத முடியாது. உண்மையில் அவள் ஏன் அந்த வீட்டில் இருந்தாள், என்ன வேலை செய்தாள், வேலை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதா, பணம் வழங்கப்பட்டதன் தன்மை என்ன, அவளது விருப்பம் என்ன, ஏதேனும் உடல் அல்லது மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதா என்பவை அனைத்தும் விசாரணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டியவை.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி குற்றத் தீர்ப்பை வழங்கவில்லை என்பதும் முக்கியம். தற்போது இருப்பது, வழக்கை விசாரணைக்கு முன்பே ரத்து செய்ய வேண்டுமா என்ற கேள்வி மட்டுமே. அந்த கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிமன்றம், வழக்கை கீழமை நீதிமன்றம் சட்ட நடைமுறைகளின்படி விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே தம்பதி தரப்பின் விளக்கங்களும், அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளன.

குழந்தையின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் 'உதவி' என்ற வார்த்தை மட்டும் போதுமான விளக்கமாக இருக்க முடியாது என்பதையும் இந்த விவகாரம் எடுத்துக்காட்டுகிறது. ஒரு குழந்தையின் குடும்ப சூழ்நிலை கடினமாக இருந்தால், அவளுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் பராமரிப்பு கிடைக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி குழந்தையின் உழைப்பை பெறுவதற்கும் இடமளிக்கக் கூடாது. இந்த இரண்டுக்கும் இடையிலான உண்மையான எல்லையை ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானிப்பதே அடுத்த கட்ட சட்ட விசாரணையின் முக்கிய பணியாக இருக்கிறது.

இதுகுறித்த உரையில், "தமிழ்நாட்டின் நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால், குடிநீர், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, பசுமை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது அரசின் முக்கிய கடமை" எனப் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினார்.

குடிநீர்

  • வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ₹500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

  • மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

  • சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க, ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

 vijay in assembly

நவீன பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

  • மதுரை மாநகராட்சியில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.

  • சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அறிவியல் பூர்வமான திடக் கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

  • திருநெல்வேலி மாநகராட்சியில் 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் சேலம் மாநகராட்சியில் 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

TVK: விஜய் பிரதமர் வேட்பாளரா? கூட்டணியில் மோதல் - பின்னணி என்ன?

மேம்படுத்தப்பட்ட நகர்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு

  • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சேதமடைந்த சாலைகளை சிரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கப்பவும், சென்னை உட்பட அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் 1850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 35 கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் (People Friendly Modern Streets), பள்ளிகளைச் சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • பிற மாநகராட்சிகளிலும் இதே போன்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பான சாலை வசதிகள், சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

 schemes

நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்

  • சுற்றுச்சூழலை பாதுகாக்க மற்றும் நகரங்களின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

  • திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி ரூபாய் செலவிலும், மாநில முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் ரூ.305 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

  • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு

  • சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தவும், பக்தர்களுக்கு எந்தவித இடையூறின்றி தரிசனம் செய்யவும், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உள்ள பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்தி வான்வழி செல்லும் மின்சார கம்பிகளை தரைக்கடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ₹36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • கடலூரில் தேவி கோட்டம் முதல் வெள்ளி கடற்கரை வரை ₹8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும்.

  • கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளை அகலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ₹50 கோடி செலவிடப்படும்.

சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு

  • சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹100 கோடி செலவிடப்படும்.

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal