Dailyhunt
காதலுக்குப் பின்னால் இவ்வளவு கோரமா? மனைவியின் கள்ளக்காதலால் ஹைதராபாத் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு!

காதலுக்குப் பின்னால் இவ்வளவு கோரமா? மனைவியின் கள்ளக்காதலால் ஹைதராபாத் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு!

ஹைதராபாத்தில் 36 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் சீதாராம் ரெட்டி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணத்திற்கு அவரது மனைவி ரேணுகாதான் காரணம் என்று குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, பாச்சுபள்ளி போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ரேணுகாவுக்கு ரமணா ரெட்டி என்ற தொழிலதிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ரேணுகா வீட்டை விட்டு வெளியேறியதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. இது தொடர்பாக சீதாராம் ரெட்டி தனது மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். தனது மகனின் தற்கொலைக்கு அவர் அனுபவித்த கடுமையான மன அழுத்தமே காரணம் என்று சீதாராமின் தந்தை வெங்கடேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ரேணுகாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சீதாராம் ரெட்டிக்கு அனுப்பப்பட்டதாகவும், அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சீதாராம் ரெட்டி மற்றும் ரேணுகாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரண்டு சிறிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக ரேணுகா மற்றும் அவரது காதலன் ரமணா ரெட்டி ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தையே சிதைத்த இந்த கள்ளக்காதல் விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal