கீது மோகன்தாஸ் இயக்கி, 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளிவந்ததுதான் 'டாக்ஸிக்'.
இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும், இத்திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் இந்த திரைப்படத்தின் ரிலீசிற்காக காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? என்று கேட்டால்.. அது கேள்வி குறிதான்.
திரைப்படம் வெளியாகி வாரத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றே இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. அதாவது, திரைப்படம் வெளியான இரண்டாம் நாளிலிருந்து வசூலில் சற்று சரிவைக் கண்ட இப்படம், திரைப்படம் வெளிவந்த அந்த வாரத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ. 23 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வசூல் சுமார் (நிகர லாபம்) ரூ. 214 கோடியாகவும், (மொத்தமாக) ரூ. 255.95 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஐந்தாம் நாளில், 'டாக்ஸிக்' திரைப்படத்தின் 16,241 காட்சிகளில்₹23 கோடி (நிகர) வசூல் செய்துள்ளதாகவும்கூறப்படுகிறது. சாக்னில்க்-கின் தகவலின்படி, 'டாக்சிக்' திரைப்படம் இதுவரை இந்தியாவில் மொத்த வசூலாக ₹255.95 கோடியையும், நிகர வசூலாக ₹214.10 கோடியையும் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இத்திரைப்படம் வெளிநாடுகளில் ₹2.00 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இத்திரைப்படம் மொத்த உலகளாவிய வசூலில் ₹285.20 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 'டாக்சிக்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 101.10 கோடி வசூலித்துள்ளது. திரைப்படம் வெளியான இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் முறையே ரூ. 37.65 கோடி, ரூ. 27.20 கோடி மற்றும் ரூ. 25.15 கோடி வசூலித்துள்ளது.
2018-ல் 'KGF' திரைப்படம் வெளியானபோது, அந்த சமயத்தில் நடிகர் யாஷ் கன்னட வட்டாரத்திற்கு வெளியே அவ்வளவு பிரபலமான நடிகராக இருக்கவில்லை. ஆனால் இங்குதான் ட்விஸ்ட், 'KGF 2' வெளிவந்த நேரத்தில், 'KGF சாப்டர் 1' திரைப்படம் அதன் திரையரங்கு மற்றும் OTT வெளியீட்டின் மூலம் ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றது. 'KGF' திரைப்படம் வெளியான முதல் நாளில் கன்னடம் மற்றும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 21.80 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, ஒன்பது வாரங்களுக்குப் பிறகு இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் ரூ. 228 கோடியாக இருந்துள்ளது. 'KGF சாப்டர் 1' திரைப்படம் வெறும் ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் 2022-ம் ஆண்டில், 'KGF சாப்டர் 2' திரைப்படம் உலகளவில் ₹1,215.00 கோடி என்ற பிரம்மாண்டமான வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் மொத்தமாக ₹1,000.85 கோடி வசூலானது. மேலும், வெளிநாடுகளில் ₹214.15 கோடி வசூலானது. இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் ₹434.70 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆச்சரியப்படுத்தும் விதமாக 'KGF சாப்டர் 2' திரைப்படத்தின் பட்ஜெட் ₹100 கோடிதான். ஆனால் கிடைத்த லாபமோ பன்மடங்கு.
'டாக்ஸிக்' திரைப்படத்தினை 'கேவிஎன் புரொடக்ஷன்ஸ்' மற்றும் 'மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்' சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் தயாரித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு படமாக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த கருத்து ரசிகர்களை இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது, அவர் ஒரு கதையை எழுதி, வேறொன்றை படமாக்கி, எடிட்டிங்-கில் ஒருவிதமாக எடிட் செய்து, திரைப்படம் ஒன்றாக வெளியிடுவதாக கூறினார். இந்த வீடியோ வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எது எப்படி இருந்தாலும் வசூலில் 'டாக்ஸிக்' தெறிக்க வைத்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.
- Arun Raj (@Arunraj03)குறைந்த இருக்கைகள் உள்ள பேருந்தில் ஏறி அமர போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் காற்று வராத இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வியர்வையில் குளித்தும் யாரும் பேருந்தை விட்டு இறங்காததால், அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அடுத்த சுற்றில் கொஞ்சம் நாற்காலிகளைப் போட்டு, அதில் அமருவதுதான் போட்டி என அறிவித்தார்கள். நாற்காலிக்காக போட்டியாளர்கள் மீண்டும் அடித்துக்கொள்ளத் தொடங்கினர். போட்டியாளர்கள் சிலர் சீரியஸாகச் சண்டையிடவும் செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளும்தான் தற்போது மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
poverty porn: சாமானியன் என்றால் கேவலமா?
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களின் சண்டைகளையும், மன ஓட்டங்களையும், உரையாடல்களையும் அப்பட்டமாக ஒளிபரப்புவது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன.
Bigg Boss The Common Manஇந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் தி காமன் மேன் சாமானியர்களின் சுய மதிப்பீட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து, "செலபிரிட்டியாக இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பார்களா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
உதாரணமாக, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் என்பவரின் சேனலில் ஏழையாக இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க போட்டிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவரிடம் ஏதோ ஒன்று (பொதுவாக பணம்) இல்லை என்பதற்காக குறைபட்டுக்கொள்வதையும், அதை வழங்க போட்டிகள் நடத்தி கண்டு களிப்பதையும் "poverty porn" என்பர். இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Mr Beastகுறிப்பாக, அவர்களைப் போன்ற எல்லா சாமானியர்களும் தங்களது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் பழக்கம் ஏற்படும்.
அதேபோல, இந்த பிக் பாஸ் தி காமன் மேன் போட்டி பிரபலமின்மையைச் சாமானியர்களுக்கு எதிரான கருவியாக்கி, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கி, காட்சிப்பொருளாக மாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சமூக வலைத்தளக் காலகட்டத்தில் பிரபலமாக இருப்பதற்கான போட்டி ஒவ்வொரு நபரிடமும் இருப்பதைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய சுரண்டலில் ஈடுபடுகின்றன.
பிரபலத்துவம் என்பது ஏதோ ஒரு துறையில் முழுமனதாகச் செயல்பட்டு வெற்றி அடைவதனால் கிடைக்கும் புகழ் வெளிச்சம் என்பதைத்தாண்டி, ஏதோ ஒரு வகையில் பிரபலமாக இருப்பதையே குறிக்கோளாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எவ்வளவோ கடினமான போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தம்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களும் சாமானியர்கள்தான் என்னும்போது, நேரடியாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டும் போட்டிகளை நடத்துவது எந்த வகையான முன்னுதாரணமாக அமையும்?
நடுவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் அத்தனையையும் பார்த்த மக்கள், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கண்ணியமான போட்டிகளை நடத்தக் கூடாதா?" என்ற கேள்வியையே எழுப்பியுள்ளனர்.
மொத்தம் 22 எபிசோடுகள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி இனியாவது கண்ணியமான முறையில் நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்!- Star Talkies (@startalkies_ofl)ஏற்கெனவே, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய பொதுமக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே அழைத்து 'காமன் மேன்' என்ற பெயரில் போட்டி நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மற்றொரு போட்டியாளரான பிரியா வர்ஷினி என்பவர் தன்னை போட்டியின் நடுவர்கள் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாஸ்க்கும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளிலேயே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
Mammootty: நடு இரவில் உதவிய தமிழர்; "நம்ம ஃபிரண்டுதான்" - நெகிழ்ந்த மம்மூட்டி!
