ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய கேப்டன் அணியை வழிநடத்தும் போது, அவரைப் பற்றிப் பேசாமல் இருப்பது அரிது.
ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் ரஜத் படிதார் விஷயத்தில் இது வேறு மாதிரியாக நடக்கிறது. கடந்த சீசன் முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக படிதார் பொறுப்பேற்றிருந்தாலும், அந்த அணியின் முதுகெலும்பாக விராட் கோலி இருப்பதால், படிதாரின் தலைமை பலரது கவனத்திற்கு வராமல் இருந்தது. கடந்த ஆண்டு ஆர்சிபி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது முதல், இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது வரை, படிதாரின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. குறிப்பாக, அந்தப் போட்டியில் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது அவரது கேரியரின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
படிதாரின் இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் 'விராட் கோலி ஃபேக்டர்' தான். மற்ற அணிகளின் கேப்டன்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோர், தங்கள் அணி தோல்வியடையும் போது கடும் விமர்சனங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், ஆர்சிபி அணியில் நிலைமை வேறு. அணி தோற்றாலும் ஜெயித்தாலும், கோலி தான் எப்போதும் செய்திகளில் முதலிடத்தில் இருப்பார். அவர் பேட்டிங் செய்யும் விதம் அல்லது களத்தில் அவர் செய்யும் சேட்டைகள் தான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்த போது கூட, கோலிக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே நடந்த மோதல் தான் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த கவனச்சிதறல், ரஜத் படிதாருக்குப் பெரும் உதவியாகவே அமைந்திருக்கிறது.
கோலி மீதான அதிகப்படியான வெளிச்சம், படிதார் அழுத்தமில்லாமல் தனது வேலையைச் சரியாகச் செய்ய வழிவகுக்கிறது. மற்ற கேப்டன்கள் மீது விழும் கடும் விமர்சனங்கள் படிதார் மீது விழாததால், அவர் கேப்டன் பொறுப்பில் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். ஆர்சிபி வரலாற்றிலேயே தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். படிதாரை கேப்டனாக நியமித்தபோதே, விராட் கோலி அவரைத் தாராளமாக ஆதரித்தார். படிதாரின் அமைதியான குணம் மற்றும் கிரிக்கெட் அறிவு ஆகியவற்றைக் கோலி பொதுவெளியிலேயே பாராட்டியது, டிரெஸிங் ரூமில் மற்ற வீரர்களிடையே படிதாருக்கு உடனடி மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றுத் தந்தது.
தர்மசாலாவில் நடந்த போட்டிக்குப்பிறகு ஆர்சிபி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மோ போபட் பேசுகையில், படிதாரின் தலைமைப்பண்பைப் பாராட்டியுள்ளார். அவர் மிகவும் அமைதியானவர் என்றும், ஒவ்வொரு போட்டிக்குப்பின் அவருக்கு அனுபவம் கூடிக்கொண்டே செல்கிறது என்றும் குறிப்பிட்டார். படிதார் களத்தில் தனது வேலையை மட்டும் கவனிப்பதிலும், களத்திற்கு வெளியே மிகவும் ரிலாக்ஸாக இருப்பதிலும் வல்லவர். அவர் தனது ஆற்றலைச் சேமித்து வைத்து, பேட்டிங்கிலும் சரி, முக்கியமான நேரத்தில் சரியான தந்திரங்களைச் செயல்படுத்துவதிலும் சரி, அதைச் சரியாகப் பயன்படுத்துகிறார். இதுதான் படிதார் தற்போது சிறப்பாகச் செயல்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் கூட்டணியை 'நெருப்பும் பனியும்' போன்ற கூட்டணி என்று சொல்லலாம். ஆர்சிபி அணியின் ஆக்ரோஷமான அடையாளமாக கோலியும், அமைதியான வியூகவாதியாக படிதாரும் இணைந்து செயல்படுவது, அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஆர்சிபி அணி இன்று இறுதிப் போட்டி வரை முன்னேறியிருப்பதற்கு, இவர்களின் இணக்கமான கூட்டணியே முக்கிய காரணம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. படிதார் தனது கேப்டன்சி பயணத்தை அமைதியாகத் தொடர, கோலியின் இந்தத் துணையும், அவர் மீது படியும் கவனமும் மிகப்பெரிய கவசமாக அமைந்துள்ளன.
பராக் எப்போதும் யோசித்து நிதானமாக முடிவெடுப்பதை விட, உள்ளுணர்வுப்படி (Instinct) முடிவெடுக்கும் கேப்டன். மும்பை அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சரை பவர் பிளேயிலேயே வீச வைத்தது அவரது துணிச்சலான முடிவுதான். அதேபோல் ரவி பிஷ்னோய்க்குப் பதில் யாஷ் ராஜ் புஞ்சாவை இறக்கியது எனப் பல தந்திரங்கள் அவருக்குக் கைகொடுத்தன. புதன்கிழமை நடைபெறப்போகும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் போது, பராக் தனது கேப்டன்சியின் உச்சக்கட்டத் தேர்வைச் சந்திக்கிறார்.
இந்தப்போட்டியில் ஆர்ஆர் அணி தோல்வி அடைந்தால்,பராக்கின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். ஒரு பெரிய அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, குறிப்பாக முந்தைய கேப்டன் சாம்சனைப் போல ஒரு பெரும் பிம்பத்தை மாற்றும் போது அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருக்கும். தோல்வி ஏற்பட்டால் பல மாத உழைப்பு வீணாகிவிடும், எனவே இந்த எலிமினேட்டர் போட்டி பராக்கின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியமான சோதனைக் களமாகும். வெற்றி பெற்றால் 2008-க்குப் பிறகு முதல் கோப்பையை நோக்கி அவர் ஒரு அடி முன்னேறுவார், தோற்றால் விமர்சனங்கள் அவரை மேலும் துளைக்கும்.

