இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் குழந்தைப் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றன.
தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்து முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், தமிழக அரசு 3வது குழந்தை பெறுவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆந்திர அரசு மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி 2, 3 குழந்தைகளை ஊக்குவிக்கிறது. 2ஆவது, 3ஆவது குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க ஊக்கம், 18 வயது வரை இலவசக் கல்வி, மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தெலுங்கானாவும் இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
Child Birthசிங்கப்பூரில் பிறப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி எட்டு ஏழு என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அங்கு குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க புதிய குடும்ப ஆதரவுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை கல்வி, சுகாதாரம் மற்றும் ரொக்கப் பரிசுகள் என மொத்தம் சுமார் இந்திய மதிப்பில் ரூ.46.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
மக்கள் தொகை குறைந்து முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாட்டில் சுகாதார மற்றும் மருத்துவத்துக்கான தேவைகள் அதிகரிக்கும். இதனால் வரி அதிகரித்து இயல்பு வாழ்க்கை கடினமாகக் கூடும்.
பல வேலைகளுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இன்றைக்கு பிறக்கும் குழந்தைகள் தான் நாளைய பொருளாதாரத்தின் காவலர்கள். மறுபக்கம் மக்கள் தொகை பெருக்கமும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மக்கள் தொகை 100, 50 ஆண்கள் - 50 பெண்கள் எனக் கொண்டால், அவர்களுக்கு 0.8 என்ற பிறப்பு விகிதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 44. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 19.
Populationபிறப்பு விகிதம் குறைந்தால் முதல் தலைமுறைக்கும் 3வது தலைமுறைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஏற்படும். இது பொருளாதாரத்தில் மட்டுமமல்லாமல் நாட்டில் இயக்கத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் மேஜிக்கல் எண் ஒன்று இருக்கிறது. அதுதான் 2.1 என்ற பிறப்பு விகிதம். பிறப்பு விகிதம் 2.1 என்பது மக்கள் தொகையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ செய்யாமல் அதே அளவில் சீராக தக்கவைக்கும் மாற்றுப் பிறப்பு விகிதம் (Replacement Level Fertility) ஆகும். அதாவது ஒரு பெண் தனது வாழ்நாளில் 2.1 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை நோக்கியே அரசுகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கின்றன.
ஆனாலும் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதையும் கணக்கிடும் போது ஏற்கெனவே மனிதர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு காடுகளை அழிக்கும் அளவு மிகுதியான நிலம் தேவைப்படுகிறது.
இத்துடன் மின்சார தேவை, வாகன பயன்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொள்ளும்போது புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசும் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடேங்கப்பா.. உச்சத்தில் முட்டை விலை! எத்தனால் காரணமா? E20 கொள்கையால் பாதிப்பு!| Explained
PK Mahanty love story1975-ம் ஆண்டின் பிற்பகுதியில்,PK-விற்கு 26 வயதாக இருந்தபோது, அவர் டெல்லியில் நுண்கலை படித்துக்கொண்டிருந்தார். அவர் ஒடிசாவின் கந்தபடா கிராமத்தில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தார். டெல்லியில் நுண்கலை படிப்பதற்காக கல்வி உதவித்தொகை பெற்ற அவர், நகர மையத்தில் உள்ள ஒரு நீரூற்றுக்கு அருகில் உருவப்படங்களை வரைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.
அவரது திறமையைப் பற்றி ஒரு உள்ளூர் செய்தித்தாள் கட்டுரை கூட வெளிவந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் லோட்டா அங்கு வந்துள்ளார். அப்போது லோட்டாவிற்கு 20 வயது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது மூன்று நண்பர்களுடன் ஒரு ஃபோக்ஸ்வேகன் வேனில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்காக வந்தபோதே PK லோட்டாவால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் முதல் பார்வைக்கும் காதல் என்ற உணர்விற்கும் மட்டும் இந்த பங்கு இருந்தது என்று கூறிவிட முடியாது, விதிக்கு முக்கியத்துவம் உண்டு என்று அவரது குடும்பத்தினர் அவரிடம் எப்போதும் கூறி வந்துள்ளனர்.
ஒரு ஜோதிடர் ஒருமுறை PK-வின் தந்தையிடம், அவரது வருங்கால மனைவி தொலைதூர தேசத்திலிருந்து வருவார் என்றும், அவர் இசைத் திறமை கொண்டவராக இருப்பார் என்றும், ரிஷப ராசியில் பிறந்திருப்பார் என்றும், மேலும் "ஒரு காட்டிற்குச் சொந்தக்காரராக" இருப்பார் என்றும் கூறியுள்ளதாக பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. லோட்டா இந்தியா திரும்பியதும், PK லோட்டாவின் பிறந்தநாளைப் பற்றிக் கேட்டுள்ளார். அவரும் மே மாதத்தில் பிறந்தவர் மற்றும் ரிஷப ராசிக்காரி என்பதை உறுதிசெய்துள்ளார். மேலும், அவர் இசைத் திறமை கொண்டவரா? என்று PKகேட்டுள்ளார். லோட்டவோ பாடல் பாடுவதோடு பியானோவும் வாசிப்பதாக கூறியுள்ளார். பிறகு, மிகவும் விசித்திரமான ஒரு கேள்வி ஒன்றினை PK லோட்டாவிடம் கேட்டுள்ளார். அவருக்கு சொந்தமாக ஒரு காடு இருந்ததா? இதுதான் அந்த கேள்வி. லோட்டா குழப்பமடைந்துள்ளார். ஆனால், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபுவான லோட்டாவின் தாத்தாவிற்கு, கோத்தன்பர்க்கிற்கு அருகில் நிலமும் ஒரு காடும் சொந்தமாக இருந்ததாக பின்னர் அவர் விளக்கியுள்ளார். PK-விற்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவரே தன் மனைவியாகப் போகிறார் என்று அவரிடம் தன் காதலை கூறியுள்ளார். பல உரையாடல்களுக்குப் பிறகு, அவருடன் ஒரிசாவுக்குச் செல்ல லோட்டா சம்மதித்துள்ளார்.
133 days journeyஇவரை சந்திப்பதற்கு முன்பு, லண்டனில் லோட்டா செவிலியராகப் பணிபுரிந்தபோது, ஒடிசாவின் 13-ஆம் நூற்றாண்டு கோனார்க் சூரியக் கோயிலின் பிரம்மாண்டமான கல் சக்கரம் இடம்பெற்றிருந்த ஒரு நாட்காட்டியை அவர் பெற்றுள்ளார். அதே புகைப்படம் PK-வின் வீட்டிலும் இருந்துள்ளது. இதைக்கண்டு அவர் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானார். பின்னர், லோட்டா தனது வாழ்க்கைத் துணையைச் சந்தித்துவிட்டதாகத் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் இருவரின் திருமணமும் பழங்குடியின முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து லோட்டா தனது படிப்பை தொடர ஸ்வீடன் செல்லவேண்டி இருந்தது. அதனால், தன் காதல் கணவரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது ஊரை நோக்கி சென்றார். ஆனால், காதல் மனைவியை பிரிந்திருக்க PK-வால் முடியவில்லை. தலைவியை பிரிந்த தலைவன் பசலைநோயால் ஆட்கொள்ளப்பட்டதை போல் காதலின் பிரிவில் இருந்துள்ளார் PK. மேலும், கடிதங்கள் வழியாகவே இருவருக்குமான காதல் அன்றைய பொழுதுகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. பின்னர், மனைவியிடம் செல்ல வேண்டும் என்ற PK-வின் எண்ணம் மட்டும் உறங்கவே இல்லை.
"ஸ்வீடனுக்கு விமானத்தில் செல்ல பயணச்சீட்டின் விலை எவ்வளவு ஆகும்?" என்று விசாரித்தபோது அது ரூ. 40,000 ஆகும் என்று தெரியவந்துள்ளது. அன்றைய பொழுதில் அது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்பட்டது. இதனால், 1977 ஜனவரி அன்று ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தன் காதலியை காண புறப்பட்டார். அந்நியர்களின் உபசரிப்பாலும், அவர்களுக்கு செய்த உதவிகளின் பிரதிபலிப்பால் கிடைத்த ரயில் டிக்கெட்டுகள், அவர்களின் கலை ஆர்வத்தால் அவர்களை வரைந்தது என்று பல்வேறு நிகழ்வுகள் ஒரு அழகிய காதல் புத்தகத்தை படிக்கும் உணர்வை இவரின் வாழ்க்கை பக்கங்கள் ஒவ்வொன்றும் கொடுக்கிறது. இவரது பயணம் சாதாரணமானதாக இல்லை. இருந்தாலும், அது அந்நியர்களால் அழகாக ஆக்கப்பட்டது. மேலும், அவரது கலை அவருக்கு கை கொடுத்ததோடு அது அவருக்கு பணத்தையும் சம்பாதிக்க உதவியது.
Indian Swedish coupleஇறுதியாக அந்த கடின பயணம் ஒரு இளைப்பாறுதலை தந்தது. ஆம்! இறுதியாக 133 நாட்களுக்கு பிறகு, தனது காதலியின் இடமான கோத்தன்பர்க்கிற்கு சென்றடைந்தார். நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாவில்லை. PK-வோ தனது மனைவியை ஆரத்தழுவி அணைத்து நெடுநேரம் அழுதுள்ளார். பின்பு, லோட்டா தனது பெற்றோருக்கு தனது ஆசை கணவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் ஸ்வீடிஷ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, PK ஸ்வீடிஷ் மொழியை கற்றுக்கொண்டு அந்த நாட்டிலேயே கலை ஆசிரியரானார். லோட்டா இசை கற்பிக்க தொடங்கினார். இந்தத் தம்பதியருக்கு 1985-ல் பிறந்த எமிலி மற்றும் 1988-ல் பிறந்த கார்ல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ஒரு அழகான காட்டிற்கு நடுவே, அமைதியான ஒரு கிராமத்தில் இவர்கள் 50 வருடங்களை தாண்டி அதே காதலோடு வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஒரு சாதாரண வரைபடக்கலை மாணவனாக இருந்து அங்கு பார்த்த வெளிநாட்டு பெண் மீது காதல் கொண்டு, சொற்ப பணத்துடன் கண்டம் விட்டு கண்டம் சைக்கிளில் சென்று காதலியை கண்ட இவர்களை பார்க்கும்போது எந்த தைரியத்தில் இதில் PR இறங்கி இருப்பார் என்ற கேள்வியை, எழுப்பினாலும் இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கே அதற்கான பதில் தெரியும், அது தான் காதல். காதல் எதுவும் செய்யும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
— Heart Aerospace (@heartaerospace)எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரையில் எரிபொருள் செலவு குறைவு என்பதுடன் எஞ்சின் பராமரிப்பு செலவும் குறைவானது. இதனால் தற்போதைய வணிக விமானங்களுடன் ஒப்பிடுகையில் இஎஸ்-30' (ES-30) விமானத்தின் பயண செலவு 40% குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் புரிந்து கொண்டுதான் யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் கனடா போன்ற சர்வதேச முன்னணி விமான நிறுவனங்கள் இப்போதே இந்த விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
முதலில் குறைந்த மின்சாரத்தையும், குறைந்த பராமரிப்பையும் கோரும் சிறிய ரக விமானங்கள் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?— AAP (@AamAadmiParty)கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சுமார் 100 ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சி (AAP) அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்றனர். பிரதமர் இல்லத்தை அடையும் முன்னரே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, காவல்துறையினர் மனுக்களை காவல்துறை வாகனம் மூலம் பிரதமர் இல்லத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
E20 பெட்ரோல் விவகாரத்தில் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தும், பிரதமர் தரப்பில் பதில் இல்லாததால் நேரிலாவது அவருக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த இந்தப் பேரணி அவசியமாகிறது என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, E20 பெட்ரோலுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடங்கிய இணையவழி மனுவில், சில நாட்களிலேயே 2,33,238 பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
E20 petrol IndiaE20 பெட்ரோல் விவகாரம் - கெஜ்ரிவாலின் 3 கோரிக்கைகள்
பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்கு E20 பெட்ரோல் அல்லது சாதாரணப் பெட்ரோல் (Pure Petrol) ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலின் விலை, சாதாரணப் பெட்ரோலின் விலையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.
பெட்ரோல் விலையைக் கண்டிப்பாக லிட்டருக்கு ₹84-க்குள் வைக்க வேண்டும்.
இதனுடன், E20 பெட்ரோலால் எந்தப் பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறிவருவதையும் கெஜ்ரிவால் கண்டித்துள்ளார்.
"எந்தப் பாதிப்பும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தால், அந்த ஆய்வை வெளியிடுங்கள்" எனக் கேட்டதுடன், "லட்சக்கணக்கான மக்கள் E20 பெட்ரோலால் என்ஜின் சேதம் மற்றும் மைலேஜ் குறைதல் உள்ளிட்ட புகார்களை எழுப்பியுள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப்பிடம் மண்டியிட்டார் மோடி? - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி, டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பணிந்து அமெரிக்காவிடம் இருந்து சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.67 லட்சம் கோடி) மதிப்பிலான எத்தனாலை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதன் சுமையை இந்திய நுகர்வோர் மீது சுமத்தும் வகையில் E20 கொள்கையை உருவாக்கியிருப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?மேலும், இதில் 'மறைமுக வெளிநாட்டு சதி' இருப்பதாகவும் கூறியுள்ளார். இதே கருத்தை பேரணிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார்.
"இந்த E20 கொள்கை அமெரிக்காவின் அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் வற்புறுத்துவதால், இந்தியா அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது இந்திய விவசாயிகளுக்குப் பதில் அமெரிக்க விவசாயிகளுக்கே லாபம் தரும்" என அவர் கூறியுள்ளார்.
பேரணியாக வந்தவர்களிடம் மனுக்களைப் பெறாதது சர்வாதிகார நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார். அத்துடன், E20 கொள்கையிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் பெரிய அளவில் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறைகூவல் விடுத்துள்ளார்.
Udhayanidhi Arrest: "இந்த கைதை காமடியாக பார்க்கிறேன்" - உதயநிதி பேசியது என்ன?
