Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மனைவிக்கு போன் செய்து கதறிய ஆகாஷ்.. அடுத்த நொடியே நடந்த கொலை" - ஆறு மாதங்களாக பிளான் போட்டு பழி தீர்த்த கும்பல்!

"மனைவிக்கு போன் செய்து கதறிய ஆகாஷ்.. அடுத்த நொடியே நடந்த கொலை" - ஆறு மாதங்களாக பிளான் போட்டு பழி தீர்த்த கும்பல்!

ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய ஆகாஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்மானா பேகம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷ், கடந்த சில மாதங்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தனேந்தல் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஏற்பட்ட போட்டி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஆகாஷுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் முன்விரோதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலின்போது ஆகாஷ், முருகனின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, சுமார் ஆறு மாதங்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்த ஆகாஷ், கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது முருகனின் மகனான 26 வயதுடைய விஜய்,ஆகாஷை கொலை செய்யப்போவதாக தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று தனிப்பட்ட சில வேலைக்காக மண்டலமாணிக்கம் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி ஆகாஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சுழி வழியாக அவர் சென்றபோது, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களுடன் அவரை பின்தொடர்ந்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சிலர் ஆயுதங்களுடன் தன்னை துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மீண்டும் ஆகாஷை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது செல்போனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள், ஆகாஷ் சென்ற சாலையில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது சாலையில் ஆகாஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களால் தாக்கி ஆகாஷை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக அவரது மனைவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

போலீசாரின் விசாரணையில், கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஆகாஷுக்கும் முருகனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முன்விரோதமே, பின்னர் முருகனின் மகன் விஜய் மற்றும் அவரது நண்பர்களுடன் ஏற்பட்டமோதலாக மாறி கொலைச் சம்பவத்தில் முடிந்ததாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகாஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் விஜய் (26), அவரது நண்பர்களான ரித்தீஷ் (24), முரளி (27), காளிதாஸ் (21), சக்திவேல் (19), தினேஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் திருச்சுழி காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கரிமூட்டம் போடும் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக தொடங்கிய முன்விரோதம், காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்படும் அளவுக்கு சென்ற சம்பவம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த உரையில், "தமிழ்நாட்டின் நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால், குடிநீர், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, பசுமை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது அரசின் முக்கிய கடமை" எனப் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினார்.

குடிநீர்

  • வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

  • ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ₹500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

  • மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழைய கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

  • சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க, ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

 vijay in assembly

நவீன பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

  • மதுரை மாநகராட்சியில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.

  • சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அறிவியல் பூர்வமான திடக் கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

  • திருநெல்வேலி மாநகராட்சியில் 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் சேலம் மாநகராட்சியில் 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

TVK: விஜய் பிரதமர் வேட்பாளரா? கூட்டணியில் மோதல் - பின்னணி என்ன?

மேம்படுத்தப்பட்ட நகர்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு

  • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சேதமடைந்த சாலைகளை சிரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கப்பவும், சென்னை உட்பட அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் 1850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 35 கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் (People Friendly Modern Streets), பள்ளிகளைச் சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • பிற மாநகராட்சிகளிலும் இதே போன்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பான சாலை வசதிகள், சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

  • இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

 schemes

நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்

  • சுற்றுச்சூழலை பாதுகாக்க மற்றும் நகரங்களின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

  • திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி ரூபாய் செலவிலும், மாநில முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் ரூ.305 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

  • நகர்ப்புற உள்ளாட்சிகளில் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு

  • சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தவும், பக்தர்களுக்கு எந்தவித இடையூறின்றி தரிசனம் செய்யவும், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உள்ள பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்தி வான்வழி செல்லும் மின்சார கம்பிகளை தரைக்கடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ₹36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • கடலூரில் தேவி கோட்டம் முதல் வெள்ளி கடற்கரை வரை ₹8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும்.

  • கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளை அகலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ₹50 கோடி செலவிடப்படும்.

சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு

  • சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹100 கோடி செலவிடப்படும்.

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal