Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மதுபோதையில் தாயிடம் அத்துமீற முயன்ற மகன்" - இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை.. சடலத்தை 3 மாதமாக மறைத்து வைத்த தாய்!

"மதுபோதையில் தாயிடம் அத்துமீற முயன்ற மகன்" - இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை.. சடலத்தை 3 மாதமாக மறைத்து வைத்த தாய்!

துரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி 50 வயதுடைய அய்யம்மாள்.

கணேசன் உயிரிழந்த நிலையில், அய்யம்மாள் தனது மகன் ராஜாவுடன் வசித்து வந்துள்ளார். ராஜாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது மனைவியைப் பிரிந்த நிலையில், அவர் தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அய்யம்மாள் நேற்று முன்தினம் (ஆக 26) கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, தனது மகனை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், இதுகுறித்து கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அய்யம்மாளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் அய்யம்மாள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு சுமார் 11.30 மணியளவில் தனது மகன் ராஜா மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும், தன்னை ஆபாசமாக பேசி தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் தவறாக நடக்க ராஜா முயன்றதாகவும், தொடர்ந்து தன்னை தாக்க முயன்றதால் ஆத்திரமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த ராஜாவை கீழே தள்ளிவிட்டு, அங்கு கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து அவரது தலை, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் தாக்கியதாகவும், இதில் ராஜா உயிரிழந்ததாகவும் அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகனின் உடலை வீட்டின் இடதுபுற வாசல் அருகே பாத்ரூம் கட்டுவதற்காக ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்த குழிக்குள் புதைத்து, அதன் மீது விறகுக் கட்டைகளை வைத்து மறைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டின் வாசலில் படிந்திருந்த ரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, மகன் காணாமல் போனது குறித்து அய்யம்மாள் கடந்த சில நாட்களாக அக்கம் பக்கத்தினரிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மகனை கொலை செய்து புதைத்துவிட்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அய்யம்மாளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே, வீட்டின் அருகே புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராஜாவின் உடல் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும். மகன் தன்னை தாக்கியதாகவும், தன்னிடம் தவறாக நடக்கமுயன்றதாகவும் கூறப்படும் நிலையில், அவரை அடித்துக் கொலை செய்து உடலை வீட்டின் அருகே புதைத்து மூன்று மாதங்களாக மறைத்து வைத்ததாக தாய் அளித்துள்ள வாக்குமூலம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 PK Mahanty love story

1975-ம் ஆண்டின் பிற்பகுதியில்,PK-விற்கு 26 வயதாக இருந்தபோது, ​​அவர் டெல்லியில் நுண்கலை படித்துக்கொண்டிருந்தார். அவர் ஒடிசாவின் கந்தபடா கிராமத்தில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தார். டெல்லியில் நுண்கலை படிப்பதற்காக கல்வி உதவித்தொகை பெற்ற அவர், நகர மையத்தில் உள்ள ஒரு நீரூற்றுக்கு அருகில் உருவப்படங்களை வரைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.

அவரது திறமையைப் பற்றி ஒரு உள்ளூர் செய்தித்தாள் கட்டுரை கூட வெளிவந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான் லோட்டா அங்கு வந்துள்ளார். அப்போது லோட்டாவிற்கு 20 வயது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது மூன்று நண்பர்களுடன் ஒரு ஃபோக்ஸ்வேகன் வேனில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்காக வந்தபோதே PK லோட்டாவால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் முதல் பார்வைக்கும் காதல் என்ற உணர்விற்கும் மட்டும் இந்த பங்கு இருந்தது என்று கூறிவிட முடியாது, விதிக்கு முக்கியத்துவம் உண்டு என்று அவரது குடும்பத்தினர் அவரிடம் எப்போதும் கூறி வந்துள்ளனர்.

ஒரு ஜோதிடர் ஒருமுறை PK-வின் தந்தையிடம், அவரது வருங்கால மனைவி தொலைதூர தேசத்திலிருந்து வருவார் என்றும், அவர் இசைத் திறமை கொண்டவராக இருப்பார் என்றும், ரிஷப ராசியில் பிறந்திருப்பார் என்றும், மேலும் "ஒரு காட்டிற்குச் சொந்தக்காரராக" இருப்பார் என்றும் கூறியுள்ளதாக பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. லோட்டா இந்தியா திரும்பியதும், PK லோட்டாவின் பிறந்தநாளைப் பற்றிக் கேட்டுள்ளார். அவரும் மே மாதத்தில் பிறந்தவர் மற்றும் ரிஷப ராசிக்காரி என்பதை உறுதிசெய்துள்ளார். மேலும், அவர் இசைத் திறமை கொண்டவரா? என்று PKகேட்டுள்ளார். லோட்டவோ பாடல் பாடுவதோடு பியானோவும் வாசிப்பதாக கூறியுள்ளார். பிறகு, மிகவும் விசித்திரமான ஒரு கேள்வி ஒன்றினை PK லோட்டாவிடம் கேட்டுள்ளார். அவருக்கு சொந்தமாக ஒரு காடு இருந்ததா? இதுதான் அந்த கேள்வி. லோட்டா குழப்பமடைந்துள்ளார். ஆனால், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபுவான லோட்டாவின் தாத்தாவிற்கு, கோத்தன்பர்க்கிற்கு அருகில் நிலமும் ஒரு காடும் சொந்தமாக இருந்ததாக பின்னர் அவர் விளக்கியுள்ளார். PK-விற்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவரே தன் மனைவியாகப் போகிறார் என்று அவரிடம் தன் காதலை கூறியுள்ளார். பல உரையாடல்களுக்குப் பிறகு, அவருடன் ஒரிசாவுக்குச் செல்ல லோட்டா சம்மதித்துள்ளார்.

 133 days journey

இவரை சந்திப்பதற்கு முன்பு, லண்டனில் லோட்டா செவிலியராகப் பணிபுரிந்தபோது, ​​ஒடிசாவின் 13-ஆம் நூற்றாண்டு கோனார்க் சூரியக் கோயிலின் பிரம்மாண்டமான கல் சக்கரம் இடம்பெற்றிருந்த ஒரு நாட்காட்டியை அவர் பெற்றுள்ளார். அதே புகைப்படம் PK-வின் வீட்டிலும் இருந்துள்ளது. இதைக்கண்டு அவர் மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானார். பின்னர், லோட்டா தனது வாழ்க்கைத் துணையைச் சந்தித்துவிட்டதாகத் தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் இருவரின் திருமணமும் பழங்குடியின முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து லோட்டா தனது படிப்பை தொடர ஸ்வீடன் செல்லவேண்டி இருந்தது. அதனால், தன் காதல் கணவரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது ஊரை நோக்கி சென்றார். ஆனால், காதல் மனைவியை பிரிந்திருக்க PK-வால் முடியவில்லை. தலைவியை பிரிந்த தலைவன் பசலைநோயால் ஆட்கொள்ளப்பட்டதை போல் காதலின் பிரிவில் இருந்துள்ளார் PK. மேலும், கடிதங்கள் வழியாகவே இருவருக்குமான காதல் அன்றைய பொழுதுகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. பின்னர், மனைவியிடம் செல்ல வேண்டும் என்ற PK-வின் எண்ணம் மட்டும் உறங்கவே இல்லை.

"ஸ்வீடனுக்கு விமானத்தில் செல்ல பயணச்சீட்டின் விலை எவ்வளவு ஆகும்?" என்று விசாரித்தபோது அது ரூ. 40,000 ஆகும் என்று தெரியவந்துள்ளது. அன்றைய பொழுதில் அது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்பட்டது. இதனால், 1977 ஜனவரி அன்று ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தன் காதலியை காண புறப்பட்டார். அந்நியர்களின் உபசரிப்பாலும், அவர்களுக்கு செய்த உதவிகளின் பிரதிபலிப்பால் கிடைத்த ரயில் டிக்கெட்டுகள், அவர்களின் கலை ஆர்வத்தால் அவர்களை வரைந்தது என்று பல்வேறு நிகழ்வுகள் ஒரு அழகிய காதல் புத்தகத்தை படிக்கும் உணர்வை இவரின் வாழ்க்கை பக்கங்கள் ஒவ்வொன்றும் கொடுக்கிறது. இவரது பயணம் சாதாரணமானதாக இல்லை. இருந்தாலும், அது அந்நியர்களால் அழகாக ஆக்கப்பட்டது. மேலும், அவரது கலை அவருக்கு கை கொடுத்ததோடு அது அவருக்கு பணத்தையும் சம்பாதிக்க உதவியது.

 Indian Swedish couple

இறுதியாக அந்த கடின பயணம் ஒரு இளைப்பாறுதலை தந்தது. ஆம்! இறுதியாக 133 நாட்களுக்கு பிறகு, தனது காதலியின் இடமான கோத்தன்பர்க்கிற்கு சென்றடைந்தார். நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாவில்லை. PK-வோ தனது மனைவியை ஆரத்தழுவி அணைத்து நெடுநேரம் அழுதுள்ளார். பின்பு, லோட்டா தனது பெற்றோருக்கு தனது ஆசை கணவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் ஸ்வீடிஷ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, PK ஸ்வீடிஷ் மொழியை கற்றுக்கொண்டு அந்த நாட்டிலேயே கலை ஆசிரியரானார். லோட்டா இசை கற்பிக்க தொடங்கினார். இந்தத் தம்பதியருக்கு 1985-ல் பிறந்த எமிலி மற்றும் 1988-ல் பிறந்த கார்ல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ஒரு அழகான காட்டிற்கு நடுவே, அமைதியான ஒரு கிராமத்தில் இவர்கள் 50 வருடங்களை தாண்டி அதே காதலோடு வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஒரு சாதாரண வரைபடக்கலை மாணவனாக இருந்து அங்கு பார்த்த வெளிநாட்டு பெண் மீது காதல் கொண்டு, சொற்ப பணத்துடன் கண்டம் விட்டு கண்டம் சைக்கிளில் சென்று காதலியை கண்ட இவர்களை பார்க்கும்போது எந்த தைரியத்தில் இதில் PR இறங்கி இருப்பார் என்ற கேள்வியை, எழுப்பினாலும் இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கே அதற்கான பதில் தெரியும், அது தான் காதல். காதல் எதுவும் செய்யும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal