Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நள்ளிரவில் வீடு புகுந்து. திருமணமான பெண்ணுடன் இருந்த வாலிபர்!" - கணவரால் அடித்து கொலை?

"நள்ளிரவில் வீடு புகுந்து. திருமணமான பெண்ணுடன் இருந்த வாலிபர்!" - கணவரால் அடித்து கொலை?

த்தரப் பிரதேசத்தில் திருமணமான பெண்ணை இரவு நேரத்தில் அவரது வீட்டில் சந்திக்கச் சென்ற 28 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புலந்தஷார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட மூன்று பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

புலந்தஷார் மாவட்டம் ஜினாமாய் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த புஷ்பேந்திராஎன அடையாளம் காணப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புஷ்பேந்திரா திங்கள்கிழமை இரவு திருமணமான ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அப்போது அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமா ஆகியோர் புஷ்பேந்திராவை பிடித்து, தடிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை காலை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனுப்ஷாஹர் வட்ட காவல் அதிகாரி மற்றும் சத்தாரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த புஷ்பேந்திராவின் உடலை கைப்பற்றி, சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த பொருட்கள் மற்றும் பிற ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவம் நடைபெற்ற விதம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊரக காவல் கண்காணிப்பாளர் அந்தரிக்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மூன்று தனிப்படை காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.

இளைஞர் எதற்காக அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார், அவர்களுக்குள் ஏற்கனவே தொடர்பு இருந்ததா, தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த புஷ்பேந்திராவின் குடும்பத்தினரிடமும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal