Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நேபாளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள்" - டெல்லியில் முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்.. மீட்புப் பணிகள் தீவிரம்!

"நேபாளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள்" - டெல்லியில் முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்.. மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள், தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து, தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதில் 495-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாயமானவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதுடன், மோப்ப நாய்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பேரிடரில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு குழுவினரும் நேபாளத்திற்கு யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியைச்சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் மூலம் 49 பேர் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றதாகவும், அவர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

இதேபோல், கோவை ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் நேபாளம் சென்றுள்ளதாகவும், அவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை அறிய முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆன்மிகப் பேச்சாளர் தேச. மங்கையர்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 150 பேர் பாதுகாப்பாக திபெத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தேச. மங்கையர்க்கரசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், யாத்திரைக் குழுவினர் திபெத்திலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்பு துண்டிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களது உறவினர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவும் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, உதவி மையத்திற்கு வரும் அழைப்புகள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், அவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மேலும், தூதரக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைபாதுகாப்பாக மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், முதலில் தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே நேபாளம் சென்றிருப்பார்கள் என கருதப்பட்ட நிலையில், தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

அவர்களில் 26 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், ஆனால் அவர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சிலரை இதுவரை கண்டறிய முடியாத நிலையில், மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்டு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நேபாள பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வரும் நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை வழங்கவும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசு அமைத்துள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

— இரா.செல்வேந்திரன் திமுக (@selvadmk96)

யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!

பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு!

கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!

எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.

 பூண்டி கலைசெல்வன்

திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.

2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.

அண்ணனின் இடத்துக்கு வந்த கலைவாணன், கலைஞரின் இடத்தை நிரப்பினார்!

கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.

கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.

2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.

ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.

2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.

பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.

49 வழக்குகள், குண்டர் சட்டம், அடங்காத ஆதரவாளர் படை!

ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.

பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.

தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தவெக vs திமுக: பேரவையில் நீடித்த பதட்டம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரண்ட திமுக! — ANI (@ANI)

எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.

கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் தவெக... விஜய் பிரதமர்?

கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.

அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal