Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நிதியமைச்சர் தான்.. இங்கிலாந்து அரசர் அல்ல" -  வழக்கில் ஆஜராக விலக்கு கேட்ட மரிய வில்சன்.. உயர்நீதிமன்றம் கடும் கேள்வி!

"நிதியமைச்சர் தான்.. இங்கிலாந்து அரசர் அல்ல" - வழக்கில் ஆஜராக விலக்கு கேட்ட மரிய வில்சன்.. உயர்நீதிமன்றம் கடும் கேள்வி!

புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, அமைச்சர் பதவியில் இருப்பதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய அவரது தரப்புக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கடும் கேள்விகளை எழுப்பினார். கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரியில் மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோர் வசித்து வந்த வீட்டில் தாக்குதல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. குடும்ப சொத்து தொடர்பான பிரச்னையின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதவை உடைத்ததுடன், அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மரிய வில்சன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய குலோத் தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். முதற்கட்டமாக சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சுட்டிக்காட்டி கூடுதல் மற்றும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புகார்தாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக மரிய வில்சன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான இந்த வழக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பதவியில் இருப்பதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் பதவியில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர்தான்; இங்கிலாந்தின் அரசர் அல்ல அதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது" என நீதிபதி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்கூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், தற்போது பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்பதால் சட்டத்தின் முன் சிறப்பு சலுகை கிடையாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் நிலையில், மரிய வில்சன் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதை பிற்பகல் தெரிவிக்குமாறு அவரது தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

— இரா.செல்வேந்திரன் திமுக (@selvadmk96)

யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!

பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு!

கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!

எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.

 பூண்டி கலைசெல்வன்

திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.

2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.

அண்ணனின் இடத்துக்கு வந்த கலைவாணன், கலைஞரின் இடத்தை நிரப்பினார்!

கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.

கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.

2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.

ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.

2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.

பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.

49 வழக்குகள், குண்டர் சட்டம், அடங்காத ஆதரவாளர் படை!

ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.

பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.

தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தவெக vs திமுக: பேரவையில் நீடித்த பதட்டம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரண்ட திமுக! — ANI (@ANI)

எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.

கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் தவெக... விஜய் பிரதமர்?

கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.

அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal