தமிழ்நாட்டின் மின்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.33,006 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு
கறவை மாடுகளுக்கான தீவனம் உள்ளிட்ட இதர இடுபொருட்களின் விலை உயர்ந்து வருவதால், பால் உற்பத்தியாளர்களின் செலவினம் அதிகரித்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி, ஏற்கெனவே ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டிருந்த பால் கொள்முதல் விலை, தற்போது ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயனடைவார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். பால் கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிப்பதுடன், தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவினை சமாளிக்கவும் உதவும்.மேலும், பால் உற்பத்தித் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.33,006 கோடியில் மின் தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மின் தொடரமைப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு தடையின்றி கொண்டு செல்வதற்காக, ரூ.33,006 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மின் தொடரமைப்புகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் பகிர்மான கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்
மின் தொடரமைப்பை மட்டும் மேம்படுத்தாமல், மின் பகிர்மான கட்டமைப்பையும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக புதிய 110/111 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், தேவையான இடங்களில் புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளும் நிறுவப்படும். மேலும், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த மின் கேபிள்கள், மின் கடத்திகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படும்.
இதன் மூலம் பழைய மின் கட்டமைப்புகளால் ஏற்படும் மின் தடைகள் குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ளவும், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் இந்த மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— இரா.செல்வேந்திரன் திமுக (@selvadmk96)யார் இந்த பூண்டி கலைவாணன்? இவரது கதை என்ன என்பதை Gen z களும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு!
பூண்டி கலைசெல்வன் கொலை வழக்கு!
கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில், திமுகவுக்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்தவர் பூண்டி கலைவாணன். இவரது அண்ணன் பூண்டி கலைசெல்வன் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். கருணாநிதிக்கு நெருக்கமான தளபதியாகவும் இருந்தார்!
எப்போதும் இளைஞர்கள் சூழ, பலத்த பாதுகாப்புடன் வலம் வருபவர் கலைசெல்வன். 2004-ம் ஆண்டு கொரடாச்சேரியில் நடந்த அதிமுக பிரமுகர் கோவி சம்பத் கொலை வழக்கில் கலைசெல்வன் முதல் குற்றவாளியாக இருந்தார். அப்போது முதலே இருதரப்புக்கும் இடையிலான பகை தொடர்ந்தது.
பூண்டி கலைசெல்வன் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு டெண்டர் கூட பூண்டி கலைசெல்வனைத் தாண்டிச் செல்லாத அளவுக்கு கட்டி ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகரித்தனர்.
2007-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டமே நடுங்கும் வகையில், ஒரு கும்பல் கலைசெல்வனை கொலை செய்தது.
அண்ணனின் இடத்துக்கு வந்த கலைவாணன், கலைஞரின் இடத்தை நிரப்பினார்!
கலைசெல்வன் கொலையால் கொதித்தெழுந்த திமுக தொண்டர்கள், பேருந்துகளை எரித்தனர். கொலையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட அதிமுகவினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். திருவாரூரே கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நெருப்பில் உருவானவர் பூண்டி கலைவாணன்.
கலைசெல்வனின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்கள் திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புதிய மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பூண்டி கலைவாணனின் வாழ்க்கையில் இந்த நாட்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது தளபதியாக இருந்து தொகுதியைப் பார்த்துக்கொண்டவர் பூண்டி கலைவாணன்.

2019-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின்தான் போட்டியிடுவார் என்றும், கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின்தான் வர வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன.
ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பூண்டி கலைவாணன் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். கலைஞரின் தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதை காலவாணனின் தொகுதியாக மாற்றினார்.
ஆரம்ப காலம் முதலே திருவாரூர் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டமாகும். அங்கே கலைசெல்வன் கட்டிக் காப்பாற்றிய உள்ளூர் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, திருவாரூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் கலைவாணன். இதற்காக அவர் கொடுத்த விலை பெரிது.
2019-ம் ஆண்டைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் கலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
பூண்டி கலைவாணனின் அரசியல் பயணம் திமுக கட்சியின் உள்ளூர் அமைப்புப் பணிகளுடன் தொடங்கியது. இப்போது சட்டமன்றத்தில் தனித்து தெரியும் தலைவராக வளர்ந்துள்ளார்.

49 வழக்குகள், குண்டர் சட்டம், அடங்காத ஆதரவாளர் படை!
ஒரு கொலையால் அரசியல் தலைவரான இவருக்கு எதிர்மறையான முகமும் உள்ளது. மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற காலத்தில், அதிமுகவினர் மீதான வன்முறைச் சம்பவங்களால் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்த அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இப்போதும் 49 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஆதரவாளர்கள் படையைத் தாண்டி, திருவாரூரில் அணுவும் அசையாது எனக் கூறப்படுகிறது.
பூண்டி கலைவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் உள்ளன. அவர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.

தற்போதும் திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்புபவர்களைச் சமாளிக்க ஆள் பலமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் கலைவாணன். ஏனென்றால், தலைமையில் இருக்கும் குடும்பத்துக்கும் அவருக்குமான பந்தம் அப்படிப்பட்டது. தீவிர விசுவாசியாக தன்னை நிரூபித்துள்ளார். திமுக கட்சியை மறுகட்டமைப்பு செய்து வரும் சூழலில், அவருக்கு புதிய மாநிலப் பதவிகள் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெக vs திமுக: பேரவையில் நீடித்த பதட்டம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திரண்ட திமுக! — ANI (@ANI)எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்." என்றிருக்கிறார்.
கேரளாவில் வளர்ந்து வரும் தவெக கிளைக்கு இவர்தான் தலைவராக இருப்பார் என்று பலரும் ஆரூடம் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் தவெக... விஜய் பிரதமர்?
கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி வளருவதில் கவனம் செலுத்தி வருகிறது. வட இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக விஜய்க்கு புரோமோஷன் செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தவெக அமைச்சர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மேடைகளில் முழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாகவே கேரளாவில் தவெக கிளையை வலிமையாக்கும் பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால், அண்டை மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க கேரளா சிறந்த தேர்வாக உள்ளது.
அடுத்ததாக தென் மாநிலங்களிலும் வட இந்தியாவிலும் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைத்து தவெகவை வேரூன்ற வைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையம்: "ஆந்திரா, கர்நாடகாவுக்கு கொண்டாட்டம்" - முதலமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?
