Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஒருநாள் நான் முதலமைச்சர் ஆவேன்" - வைரலாகும் த்ரிஷா பேட்டி

"ஒருநாள் நான் முதலமைச்சர் ஆவேன்" - வைரலாகும் த்ரிஷா பேட்டி

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில், நடிகை த்ரிஷாவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு அவர் அளித்த இந்தப் பேட்டி, தற்போது விஜய்யின் அரசியல் வெற்றியோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா விளையாட்டுக்காகச் சொன்ன ஒரு விஷயம், இப்போதுள்ள அரசியல் சூழலில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைத்துறையில் நுழைந்த ஆரம்பக் காலத்தில் த்ரிஷாவிடம் அவரது எதிர்கால லட்சியம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நிச்சயமாக நான் ஒரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன். இன்னும் 10 ஆண்டுகளில் நான் அதைச்செய்து காட்டுவேன், பொறுத்திருந்து பாருங்கள்" என்று சிரித்துக்கொண்டே ஜாலியாகப் பதில் சொல்லியிருந்தார். மேலும், முதல்வர் ஆனால் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "முதலில் நீங்கள் அனைவரும் எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்கள், அப்புறம் சொல்கிறேன்" என்று கலகலப்பாகப் பதிலளித்திருந்தார்.

நேற்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடிய த்ரிஷா, சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. தமிழகத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் உட்பட கட்சிகளுடன் கூட்டணி தவெக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal