Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரத்தவெள்ளத்தில் பாத்ரூமில் கிடந்த கணவன்.. நடத்தையில் சந்தேகபட்டவரை குத்தி கொன்ற மனைவி! வழுக்கி விழுந்ததாக நாடகம்?

ரத்தவெள்ளத்தில் பாத்ரூமில் கிடந்த கணவன்.. நடத்தையில் சந்தேகபட்டவரை குத்தி கொன்ற மனைவி! வழுக்கி விழுந்ததாக நாடகம்?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சாமி என்பவரது மகன் மணி (வயது 34).

இவர் அருகில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அப்பனேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (27) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சங்கராபுரத்தில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் 8 ஆண்டுகளா குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திவ்யபாரதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி கணவர் மணி சந்தேகிப்பதாகவும், அதன் காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி சண்டை போட்டு மனைவியை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த மணி மனைவியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மணியின் மனைவி திவ்யபாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தான் தள்ளி விட்டதில் வழுக்கி விழுந்து அடிபட்டு உயிரிழந்ததாக, முதலில் தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்திய குறுக்கு விசாரணையில் மனைவி திவ்யபாரதி சண்டையின் போது கணவனை பாத்ரூமில் தள்ளி விட்டபின் கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியதும், வெகு நேரம் இரத்தம் வெளியேறியதால் மணி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமயிலான போலீசார் திவ்யபாரதியை கைது செய்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal