Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சச்சின், தோனி, கோலியின் அடுத்த "வாரிசு" - 15 வயதில் உலகையே மிரட்டும் சூர்யவன்ஷி!

சச்சின், தோனி, கோலியின் அடுத்த "வாரிசு" - 15 வயதில் உலகையே மிரட்டும் சூர்யவன்ஷி!

ந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மதம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டி, இந்திய ரசிகர்களுக்கு ஏன் கிரிக்கெட் இவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியது. சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி போன்ற ஜாம்பவான்களைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்த காலம் உண்டு. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பார்மட்டில் மட்டுமே விளையாடினாலும், இன்றும் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், புதிய சண்டிகரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த எலிமினேட்டர் போட்டியில், கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத ஒரு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது. அவர் பெயர் வைபவ் சூர்யவன்ஷி.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சிகள் எப்போதும் 22 கெஜம் நீளமுள்ள அந்த ஆடுகளத்தை சுற்றியே இருக்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 1990-களில் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்றியவர் சச்சின் டெண்டுல்கர். அவருக்குப் பிறகு வந்த எம்.எஸ். தோனி, ஒரு சாதாரண ஊரில் இருந்து வந்து, பதற்றமில்லாமல் போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று இந்தியாவிற்குச் சொல்லிக்கொடுத்தார்.இன்று விராட் கோலி, அதீத ஆக்ரோஷத்துடனும், ரன் மெஷின் போலவும் விளையாடி இந்தியாவை உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செய்ய வைத்துள்ளார். இவர்களுக்கு மத்தியில், வைபவ் சூர்யவன்ஷி என்ற 15 வயது சிறுவன், ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளான்.

பீகாரைச் சேர்ந்த இந்த 15 வயது சிறுவன், பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூர்யவன்ஷியைப் பற்றி இதுவரை "வருங்கால நம்பிக்கை", "அற்புதமான திறமை" என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால், இந்த ஒரே போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் அடித்து, அந்தப் பேச்சுக்களையெல்லாம் மொத்தமாக மாற்றியுள்ளான். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை அவன் சிதறடித்த விதம், அவன் ரன்களை எடுப்பதற்காக மட்டும் விளையாடவில்லை, களத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்காகவே விளையாடுகிறான் என்பதைக் காட்டியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்தது அவனது திறமைக்குச் சான்றாக இருந்தது. ஆனால், ஐபிஎல் போன்ற பெரிய மேடையில் அழுத்தமான போட்டியில் இப்படி விளையாடுவது அவனது முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை அவன் முறியடித்துள்ளான். துரதிர்ஷ்டவசமாக, சதத்தை நெருங்கியபோது 97 ரன்களில் ஆட்டமிழந்தான். 230 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவன் விளையாடிய விதம், இன்று கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கூட கற்பனை செய்ய முடியாத இடங்களில் எல்லாம் பந்துகளைப் பறக்க விட்டான். அவன் பேட்டிங் செய்த விதம், இந்த மேடையே தனக்காகத்தான் அமைக்கப்பட்டது என்ற நம்பிக்கையுடன் இருந்தது.

சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் நேர்த்தி, தோனியின் அதிரடி பேட் சுழற்சி, விராட் கோலியின் அபார தன்னம்பிக்கை என மூவரின் சிறப்புகளையும் தன்னுள் கொண்ட ஒரு கலவையாக வைபவ் சூர்யவன்ஷி திகழ்கிறான். நவீன டி20 கிரிக்கெட்டில் பல அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும், இவன் அனைவரையும் விடத் தனித்துத் தெரிகிறான். இவனுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் உள்ள தொடர்பு புள்ளிவிவரங்களில் மட்டும்இல்லை, களத்தில் அவன் இருக்கும் 'பிரசன்ஸ்' எனப்படும் கம்பீரத்தில்தான் இருக்கிறது. சச்சின் மரியாதையைத் தேடினார், தோனி நம்பிக்கையை உருவாக்கினார், கோலி பயத்தை ஏற்படுத்தினார். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து, ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறான்.

நவீன கிரிக்கெட் உலகுக்குத் தேவையான ஒரு அதிரடி ஆட்டக்காரராக இவன் வளர்ந்து வருகிறான். எதிர்கால கிரிக்கெட் உலகின் ராஜாவாக இவன் உருவெடுப்பான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் கிரிக்கெட் கனவு, சச்சின், தோனி, கோலி ஆகியோருடன் நிற்கவில்லை, வைபவ் சூர்யவன்ஷி மூலமாக மீண்டும் ஒரு புதிய வேகத்துடன் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த 15 வயது சிறுவனின் வருகை, இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது மட்டும் நிச்சயம். இவனைப் போன்ற திறமையாளர்களைக் கொண்டு இந்திய அணி வரும் காலங்களில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பராக் எப்போதும் யோசித்து நிதானமாக முடிவெடுப்பதை விட, உள்ளுணர்வுப்படி (Instinct) முடிவெடுக்கும் கேப்டன். மும்பை அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சரை பவர் பிளேயிலேயே வீச வைத்தது அவரது துணிச்சலான முடிவுதான். அதேபோல் ரவி பிஷ்னோய்க்குப் பதில் யாஷ் ராஜ் புஞ்சாவை இறக்கியது எனப் பல தந்திரங்கள் அவருக்குக் கைகொடுத்தன. புதன்கிழமை நடைபெறப்போகும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் போது, பராக் தனது கேப்டன்சியின் உச்சக்கட்டத் தேர்வைச் சந்திக்கிறார்.

இந்தப்போட்டியில் ஆர்ஆர் அணி தோல்வி அடைந்தால்,பராக்கின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். ஒரு பெரிய அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, குறிப்பாக முந்தைய கேப்டன் சாம்சனைப் போல ஒரு பெரும் பிம்பத்தை மாற்றும் போது அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருக்கும். தோல்வி ஏற்பட்டால் பல மாத உழைப்பு வீணாகிவிடும், எனவே இந்த எலிமினேட்டர் போட்டி பராக்கின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியமான சோதனைக் களமாகும். வெற்றி பெற்றால் 2008-க்குப் பிறகு முதல் கோப்பையை நோக்கி அவர் ஒரு அடி முன்னேறுவார், தோற்றால் விமர்சனங்கள் அவரை மேலும் துளைக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal