Dailyhunt
சீசனில் முதல் முறை ஆல் அவுட்! கோலியின் அடுத்த ரெகார்ட் கிரியேட் மோமென்ட்.. தோல்வியிலும் ஸ்பாட்லைட் பெற்றது எப்படி?

சீசனில் முதல் முறை ஆல் அவுட்! கோலியின் அடுத்த ரெகார்ட் கிரியேட் மோமென்ட்.. தோல்வியிலும் ஸ்பாட்லைட் பெற்றது எப்படி?

கமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

போட்டி முடிவில் RCB தோல்வியடைந்தாலும், ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்தது, விராட் கோலியின் புதிய ரெகார்ட் கிரியேட் மோமென்ட்.

போட்டியின் தொடக்கத்தில் கோலி தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ககிசோ ரபாடா வீசிய ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அந்த வேகத்தில் RCB பெரிய ஸ்கோரை கடக்கும் போல தெரிந்தது.ஆனால், அதே ரபாடா தனது அடுத்த ஸ்பெல்லிங் கோலியை அவுட் செய்து போட்டியின் போக்கையே மாற்றினார். கோலி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ரஷித் கான், அர்ஷத் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி RCB அணியை 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ஈஸியான இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரின் வேகமான இன்னிங்ஸ் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் 25 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 155 ரன்களுக்கு முழுமையாக சுருண்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி சாதனையை தவிர்த்து நடப்பு ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி முதல் முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது.

ஆனால் இந்த போட்டியின் உண்மையான ஹைலைட் வேறு ஒன்று. இந்த இன்னிங்ஸில் கோலி, ஐபிஎல் வரலாற்றில் இந்திய மண்ணில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். நீண்ட காலமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கோலி, இந்த சாதனையின் மூலம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். RCB ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், கோலியின் இந்த 8000 ரன் மைல்கல் அந்த ஏமாற்றத்தை மறக்க வைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal