Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சிறுவனை கட்டிலில் கட்டிப்போட்டு.. ஆசிரியர் உடலுறவு!" சகோதரனை காரில் பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்த சகோதரி - என்ன நடந்தது?

"சிறுவனை கட்டிலில் கட்டிப்போட்டு.. ஆசிரியர் உடலுறவு!" சகோதரனை காரில் பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்த சகோதரி - என்ன நடந்தது?

ன்னிடம் படிக்க வந்த சிறுவனைத் தனது படுக்கையில் கட்டிப்போட்டு, அவனது கண்களைக் கட்டிய பின்னர் பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக ஆசிரியை ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் உள்ள ஒரு ஆயத்தப் பள்ளியில் பணிபுரிந்த 65 வயதான டெபோரா ஃபிராங்க்ளின், 1990-களில் அந்தச் சிறுவனுக்கு ஒன்பது முதல் 12 வயது வரை இருந்தபோது, ​​அவனுக்கு எதிராக எட்டு முறை பெரும் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளநிலையில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

அந்த சமயத்தில் 30 வயதுகளில் இருந்தவரும், திருமணமானவருமான ஃபிராங்க்ளின், அந்தச் சிறுவனுக்குத் தனிப்பட்ட ஆசிரியராக (டியூஷன் டீச்சர்) இருந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுவனை "தொடர்ச்சியான பாலியல் நடவடிக்கைகளுக்கு" உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் அந்தச் சிறுவனின் முன்னால் ஆடையை அகற்றுவது உள்ளிட்ட பல பாலியல் ரீதியான செயல்பாடுகளில் ஃபிராங்க்ளின் ஈடுபட்டுள்ளார். மேலும், சிறுவனின் வீட்டிலும் தனது வீட்டிலும் பல முறை அந்த சிறுவனிடம் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

ஹெர்ட்ஃபோர்ட்ஷயரின் ராட்லெட்டைச் சேர்ந்த ஃபிராங்க்ளின், அந்தக் குற்றச்சாட்டுகள் நடந்ததை மறுப்பதோடு, அந்தச் சிறுவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது தனக்கு நினைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது ​​குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த ஃபிராங்க்ளின் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது ஃபிராங்க்ளின் காவலில் வைக்கப்பட்டார். அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் தண்டனைத் தீர்ப்பின்போது ஃபிராங்க்ளினுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு "அதிக வாய்ப்புள்ளது" என்று நீதிபதி கம்ரான் சௌத்ரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்புகளின் போது சிறுவனின் அறையில் தனியாக இருப்பதற்கு ஃபிராங்க்ளினை அவரது குடும்பத்தினர் நம்பி அனுப்பினார் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் சிறுவனுடன் தனக்கான உறவுமுறைக்கான எல்லையை அவர் வகுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் சகோதரி, தனது இல்லத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிறுவனுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக புகார்தாரரும் ஒப்புக்கொண்டு சாட்சியளித்துள்ளார். மற்றொரு சம்பவத்தில், ஃபிராங்க்ளின் அவரது சொந்த இல்லத்தில் சிறுவனை கட்டிலில் கட்டிப்போட்டு, கண்களைக் கட்டி, பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று புகார்தாரர் கூறியுள்ளார். மற்றொரு பாலியல் செயலின் போது, ​​ஃபிராங்க்ளின் அவரது கணவரின் பெயரை அழைத்ததாகக் குற்றஞ்சாட்டியவர் தெரிவித்துள்ளார். மேலும், ஃபிராங்க்ளின் சிறுவனிடம் தன்னை அவரது "காதலி" என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் தங்களது உறவை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்குமாறு அவரை எச்சரித்ததாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியதாக நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் ஆரம்பத்தில் 2024-ம் ஆண்டில் இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஃபிராங்க்ளினுக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையிலான உறவு "முற்றிலும் முறையானது"என்றும், "அசாதாரணமான நெருக்கமான மற்றும் பொருத்தமற்றது" அல்ல என்றும் எதிர் தரப்பின் நிலைப்பாடு இருந்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தனது தரப்பு வாதத்தில் சாட்சியமளித்த ஃபிராங்க்ளின், "ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளும் சமூக ரீதியாகப் பழகுவது மிகவும் சாதாரணம்" என்று நடுவர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஃபிராங்க்ளின் இனி பள்ளியில் பணிபுரியவில்லை என்றும், அவர் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு ராயல் சொசைட்டி ஃபார் தி புரொடெக்ஷன் ஆஃப் பேர்ட்ஸ் (RSPB) என்ற தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றங்கள் நடந்தபோது நடைமுறையில் இருந்த சட்டமான, 1960-ம் ஆண்டின் குழந்தைகளுடனான ஒழுக்கக்கேடு சட்டத்தின் கீழ் ஃபிராங்க்ளின் மீது குற்றம் சாட்டப்பட்டதாக ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் பின்னர் 2003-ம் ஆண்டின் பாலியல் குற்றங்கள் சட்டத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஒரு குற்றம் நடந்து எவ்வளவு காலம் ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்த வழக்கு நிரூபிக்கிறது. ஃபிராங்க்ளின் தனது நம்பிக்கைக்குரிய பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார், மேலும் நடுவர் குழுவின் குற்றத் தீர்ப்புகளை நான் வரவேற்கிறேன்", என்று சிறுவனின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தற்போது அவர்கள் அக்டோபரில் வரப்போகும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal