Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தினம் 10,000 ஸ்டெப்ஸ்.. உங்க உடம்புக்குள்ள நடக்கும் அந்த அதிசயம் இதுதான்!

தினம் 10,000 ஸ்டெப்ஸ்.. உங்க உடம்புக்குள்ள நடக்கும் அந்த அதிசயம் இதுதான்!

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான ஒரு முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு நபர் தொடர்ந்து 30 நாட்களுக்கு தினமும் இந்த இலக்கை எட்டினால், அவரது உடலில் சூப்பரான மாற்றங்கள் ஏற்படும் என்று லேட்டஸ்ட் ஹெல்த் ரிப்போர்ட்டுகள் சொல்கின்றன. இப்போதைய பிஸியான லைஃப்ஸ்டைலில் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்கு, வாக்கிங் செல்வது என்பது மிகவும் சிம்பிளான மற்றும் பவர்ஃபுல் தீர்வாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு மாதம் தொடர்ந்து செய்தாலே கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்ச்சியாக ஒரு மாதம் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் முதல் பெனிபிட் இதய ஆரோக்கியம் மேம்படுவதுதான். வேகமாக நடக்கும்போது இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்த ஓட்டம் சீராகிறது. இது பிளட் பிரஷரை கண்ட்ரோலில் வைக்க உதவுவதுடன், ஹார்ட் அட்டாக் போன்ற ரிஸ்க்குகளை பெருமளவு குறைக்கிறது. குறிப்பாக, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைத்திருக்க 10,000 ஸ்டெப்ஸ் வாக்கிங் மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெயிட் லாஸ் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 30 நாட்களில் தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஆவரேஜாக ஒரு நாளைக்கு 300 முதல் 500 கலோரிகள் வரை இந்த வாக்கிங் மூலம் குறைக்க முடியும். இது தொப்பையைக் குறைக்கவும், உடலை ஒரு ஷேப்புக்குக் கொண்டு வரவும் உதவுகிறது. ஜிம்முக்குச் சென்று கஷ்டமான வொர்க்அவுட் செய்ய முடியாதவர்கள், வாக்கிங்கை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு 30 நாட்கள் செய்தால் நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம்.

உடல் நலனைத் தாண்டி, மென்டல் ஹெல்த்துக்கும் வாக்கிங் ஒரு பெஸ்ட் மருந்தாக இருக்கிறது. நடக்கும்போது உடலில் 'எண்டோர்பின்' எனப்படும் ஹார்மோன்கள் சுரக்கின்றன, இது மன அழுத்தத்தைக் குறைத்துமைண்டை ரிலாக்ஸாக வைக்கிறது. 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு நபருக்கு நல்ல தூக்கம் வருவதையும், நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பதையும் அவர்களே உணர முடியும். டென்ஷன் மற்றும் கவலையில் இருப்பவர்களுக்கு ஒரு மாதம் தொடர்ந்து நடப்பது மன அமைதியைத் தரும்.

மேலும், எலும்புகள் மற்றும் தசைகளின் பலத்திற்கு இந்த வாக்கிங் ரொம்ப முக்கியம். தொடர்ந்து நடப்பது கால் தசைகளை வலுவாக்குவதுடன், மூட்டுகளில் ஏற்படும் வலிகளைக் குறைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புப் பிரச்சனைகளைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி. அத்துடன், சுகர் பேஷண்டுகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க இது ரொம்பவே ஹெல்ப் பண்ணும். செரிமானமும் சீராகி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்குவதை நீங்கள் கண் கூடாகப் பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal