Dailyhunt
திருப்பரங்குன்றம்.. முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப்போவது யார்? அதிமுக - திமுக இடையே நேரடி போர்!

திருப்பரங்குன்றம்.. முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப்போவது யார்? அதிமுக - திமுக இடையே நேரடி போர்!

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது?

என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தின் ஆன்மீகச் சிறப்பு மிக்கத் தொகுதியான திருப்பரங்குன்றம், அரசியல் களத்தில் எப்போதும் அதிரடி மாற்றங்களைச் சந்திக்கும் ஒரு இடமாகும். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 14 சதவீதம் இருப்பது இந்தத் தொகுதியின் மிகப் பெரிய பலமாகும்.

திருப்பரங்குன்றம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.39 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 34.2 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முக்குலத்தோர் 24 சதவீதத்தோடு மிகப்பெரிய சக்தியாக உள்ளனர். நாடார்கள் 10 சதவீதமும், நாயுடுக்கள் 10 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 10 சதவீதமும் உள்ளனர். 78 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், முக்குலத்தோர் வாக்குகளே எப்போதும் வெற்றிக் கனியைத் தீர்மானிக்கின்றன.

   திருப்பரங்குன்றம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் கோயில் வாசலில் முறையான வாகன நிறுத்தமிடம் இல்லாததால் நிலவும் போக்குவரத்து நெரிசல் மக்களின் பெரும் அதிருப்திக்குக் காரணமாக உள்ளன. திருவிழாக் காலங்களில் சுகாதார வசதிகள் மற்றும் குப்பை மேலாண்மைச் சீர்கேடு திருப்பரங்குன்றம் மக்களின் நீண்ட காலக் குறையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 31.4 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 35.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 43.8 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 52.3 சதவீதமாகத் தனது செல்வாக்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 67 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 87 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 140 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 123 பூத்களாக நீடிக்கிறது. சுமார் 45 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, திருப்பரங்குன்றத்தில் அதிமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 80 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 85 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. திமுக அதே 32 சதவீத வாக்குகளுடன் கடும் போட்டியை அளிக்கிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் பூஜ்யமாக இருப்பதால், கடும் போட்டி நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal