Dailyhunt
உங்க போன்ல சார்ஜ் சீக்கிரம் தீருதா? மக்களே உஷார்! சாதாரணமா நினைக்காதீங்க

உங்க போன்ல சார்ஜ் சீக்கிரம் தீருதா? மக்களே உஷார்! சாதாரணமா நினைக்காதீங்க

ன்றைய டிஜிட்டல் உலகில் நம்முடைய மொத்த வாழ்க்கையுமே ஒரு சின்ன ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்டது. வங்கித் தகவல்கள் முதல் தனிப்பட்ட புகைப்படங்கள் வரை அனைத்தும் போனில் இருப்பதால், ஹேக்கர்களின் முதல் டார்கெட்டாக நம் போன் இருக்கிறது.

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதை சில அறிகுறிகள் மூலம் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்கள் போன் பேட்டரி வழக்கத்தை விட மிக வேகமாகத் தீர்ந்து போகிறதா என்று கவனியுங்கள். நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் பேட்டரி குறைந்தால், பின்னணியில் ஏதோ ஒரு உளவு பார்க்கும் ஆப் (Spy App) வேலை செய்கிறது என்று அர்த்தம்.

அடுத்ததாக, உங்கள் போன் அடிக்கடி சூடாகிறதா என்று பாருங்கள். கேம் விளையாடும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ போன் சூடாவது சகஜம். ஆனால், சும்மா இருக்கும்போதே போன் சூடாகிறது என்றால், உங்கள் தகவல்கள் ரகசியமாக வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருள்.அதேபோல், உங்கள் மொபைல் டேட்டா திடீரென காலியானால் அது ஒரு எச்சரிக்கை மணி. ஹேக்கர்கள் உங்கள் டேட்டாவைப் பயன்படுத்திதான் உங்கள் விவரங்களைத் திருடுவார்கள். எனவே, டேட்டா பயன்பாட்டை எப்போதும் செக் செய்துகொண்டே இருங்கள்.

உங்கள் போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்யாத புதுப்புது ஆப்ஸ் தானாகவே வந்து சேர்கிறதா என்று பாருங்கள். சில நேரங்களில் நாம் எதாவது ஒரு லிங்க்கை கிளிக் செய்யும்போது, நமக்குத் தெரியாமலேயே மர்மமான ஆப்ஸ் டவுன்லோட் ஆகிவிடும். இவை உங்கள் கேமரா மற்றும் மைக்ரோபோனை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை. மேலும், உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் போனில் இருந்து மற்றவர்களுக்கு மெசேஜ் அல்லது இமெயில் சென்றால், உங்கள் போன் முழுமையாக ஹேக்கர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளலாம்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? எப்போதும் அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் தவிர வேறு எங்கும் ஆப்ஸ் டவுன்லோட் செய்ய வேண்டாம். அவ்வப்போது உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்வதும், சாஃப்ட்வேர் அப்டேட்களை உடனுக்குடன்செய்வதும் நல்லது. மிக முக்கியமாக, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை (Public Wi-Fi) கனெக்ஷனை பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்யாதீர்கள். உங்கள் போனில் சந்தேகம் இருந்தால், உடனே 'பேக்டரி ரீசெட்' (Factory Reset) செய்வதுதான் ஒரே வழி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal