ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெளியான ஒரு விளம்பரத்தில், நடிகை கிருதி சனோன் அணிந்திருந்த வெஸ்டோ இண்டியன் உடை குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன.
ரக்ஷாபந்தன் சகோதர - சகோதரி உறவை கொண்டாடும் ஒரு இந்திய பாரம்பரிய பண்டிகை என்றும் அதற்கு இந்த உடை பொருந்தவில்லை என்றும் விவாதங்கள் எழுந்தன. அதையடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான கங்கனா ரனாவத், இது குறித்து கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை மையக்கருவாக கொண்டு வெளியான இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அணிந்திருந்த உடை குறித்து சிலர் வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, விவகாரம் திரையுலகையும் சென்றடைந்தது.
இந்த சூழலில் கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பதிவின் மூலம் "ரக்ஷா பந்தன் போன்ற பாரம்பரிய நிகழ்வில் பல்வேறு வகையான உடைகள் இருக்கும் நிலையில், அந்த குறிப்பிட்ட தோற்றத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்" என்ற கேள்வி எழுப்பினார். விளம்பரம் திட்டமிட்டே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது போல் இருப்பதாகவும்" குறிப்பிட்டார். கங்கனா ரனாவத்தின் இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பரவத் தொடங்கின. மேலும் கங்கனாவின் இந்த விமர்சனத்திற்கு கிருதி சனோனும் பதிலளித்திருந்தார். அதில் "ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை தொடர்ந்து சமூகமே தீர்மானிக்க முயற்சிப்பது ஏன்?" என்ற கேள்வியை முன்வைத்தார். பண்டிகைகளின் உண்மையான அர்த்தம் ஒருவர் அணியும் ஆடையில் மட்டும் இல்லை என்றும், அந்த பண்டிகையுடன் தொடர்புடைய உணர்வுகள் மற்றும் உறவுகளில் தான் அதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் கிருதி குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், கங்கனா ரனாவத் கடந்த காலங்களில் மேற்கத்திய உடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையவாசிகள் தற்போது மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கிருதி சனோன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரின் தேசிய திரைப்பட விருது விழா தோற்றங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 'மிமி' (2021) திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றபோது, கிருதி சனோன் புடவை அணிந்து விருது பெற்றதை அந்தக் காணொலி சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம், 2015ஆம் ஆண்டு வெளியான 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை கங்கனா ரனாவத் பெற்றபோது, அவர் தோள்பட்டை இல்லாத கவுன் அணிந்திருந்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து கங்கனா விருது பெறும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
இதனுடன், தேசிய திரைப்பட விருதுகளை புடவை அணிந்து பெற்ற பல்வேறு நடிகர்களின் பழைய காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. கங்கனாவின் ஆடைத் தேர்வை விமர்சிப்பதைவிட, அவர் கடந்த காலங்களில் மேற்கத்திய உடைகளில் தோன்றியிருக்கும்நிலையில், தற்போது கிருதியின் ஆடை குறித்து தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகளையே இணையவாசிகள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பெண்களுக்கு தற்போது பல்வேறு வகையான ஆடைகளைத் தேர்வு செய்யும் சுதந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. காக்டெய்ல் உடைகள் முதல் லெஹங்கா சோலி, ஜீன்ஸ் முதல் புடவை, பிகினி முதல் சல்வார் கமீஸ் வரை பல்வேறு ஆடைத் தேர்வுகள் பெண்களுக்கு இருப்பதாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கங்கனா ரனாவத் நடித்த மற்றொரு பழைய விளம்பரமும் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. நக்ஷத்ரா நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கங்கனா தோன்றியிருந்த நிலையில், அதில் அவர் ஒரு தோள்பட்டை வடிவமைப்புடன் கூடிய வெள்ளை நிற உடையை அணிந்திருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பழைய விளம்பரத்தையும் தற்போதைய விவாதத்துடன் இணைத்து சமூக வலைதளப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். கங்கனா தற்போது தெரிவிக்கும் கருத்துகளுக்கும், அவர் கடந்த காலங்களில் அணிந்திருந்த உடைகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். இதனால், கிருதி சனோனின் ஆடை குறித்த கங்கனாவின் கருத்து தொடர்பான விவாதம், தற்போது கங்கனாவின் முந்தைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் இடம்பெற்ற ஆடைத் தேர்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Arun Raj (@Arunraj03)குறைந்த இருக்கைகள் உள்ள பேருந்தில் ஏறி அமர போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அவர்கள் காற்று வராத இருண்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வியர்வையில் குளித்தும் யாரும் பேருந்தை விட்டு இறங்காததால், அனைவரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அடுத்த சுற்றில் கொஞ்சம் நாற்காலிகளைப் போட்டு, அதில் அமருவதுதான் போட்டி என அறிவித்தார்கள். நாற்காலிக்காக போட்டியாளர்கள் மீண்டும் அடித்துக்கொள்ளத் தொடங்கினர். போட்டியாளர்கள் சிலர் சீரியஸாகச் சண்டையிடவும் செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளும்தான் தற்போது மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
poverty porn: சாமானியன் என்றால் கேவலமா?
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுபவர்களின் சண்டைகளையும், மன ஓட்டங்களையும், உரையாடல்களையும் அப்பட்டமாக ஒளிபரப்புவது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன.
Bigg Boss The Common Manஇந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் தி காமன் மேன் சாமானியர்களின் சுய மதிப்பீட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பாளர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து, "செலபிரிட்டியாக இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பார்களா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களின் ஏழ்மை, குடும்பச் சச்சரவுகள், சமூகப் பின்னணி ஆகியவை டி.ஆர்.பி-யை ஏற்றும் காரணிகளாக அணுகப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
உதாரணமாக, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் என்பவரின் சேனலில் ஏழையாக இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க போட்டிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒருவரிடம் ஏதோ ஒன்று (பொதுவாக பணம்) இல்லை என்பதற்காக குறைபட்டுக்கொள்வதையும், அதை வழங்க போட்டிகள் நடத்தி கண்டு களிப்பதையும் "poverty porn" என்பர். இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Mr Beastகுறிப்பாக, அவர்களைப் போன்ற எல்லா சாமானியர்களும் தங்களது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் பழக்கம் ஏற்படும்.
அதேபோல, இந்த பிக் பாஸ் தி காமன் மேன் போட்டி பிரபலமின்மையைச் சாமானியர்களுக்கு எதிரான கருவியாக்கி, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கி, காட்சிப்பொருளாக மாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சமூக வலைத்தளக் காலகட்டத்தில் பிரபலமாக இருப்பதற்கான போட்டி ஒவ்வொரு நபரிடமும் இருப்பதைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய சுரண்டலில் ஈடுபடுகின்றன.
பிரபலத்துவம் என்பது ஏதோ ஒரு துறையில் முழுமனதாகச் செயல்பட்டு வெற்றி அடைவதனால் கிடைக்கும் புகழ் வெளிச்சம் என்பதைத்தாண்டி, ஏதோ ஒரு வகையில் பிரபலமாக இருப்பதையே குறிக்கோளாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எவ்வளவோ கடினமான போட்டிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக ஒரு நிகழ்ச்சியை நடத்தம்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களும் சாமானியர்கள்தான் என்னும்போது, நேரடியாக உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டும் போட்டிகளை நடத்துவது எந்த வகையான முன்னுதாரணமாக அமையும்?
நடுவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் அத்தனையையும் பார்த்த மக்கள், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கண்ணியமான போட்டிகளை நடத்தக் கூடாதா?" என்ற கேள்வியையே எழுப்பியுள்ளனர்.
மொத்தம் 22 எபிசோடுகள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி இனியாவது கண்ணியமான முறையில் நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்!- Star Talkies (@startalkies_ofl)ஏற்கெனவே, பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய பொதுமக்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையே அழைத்து 'காமன் மேன்' என்ற பெயரில் போட்டி நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மற்றொரு போட்டியாளரான பிரியா வர்ஷினி என்பவர் தன்னை போட்டியின் நடுவர்கள் அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுவெளியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாஸ்க்கும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளிலேயே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
Mammootty: நடு இரவில் உதவிய தமிழர்; "நம்ம ஃபிரண்டுதான்" - நெகிழ்ந்த மம்மூட்டி!
