Friday, 22 Jan, 9.43 am Mass Mano Creation

Posts
டெஸ்ட் தொடரில் விளையாடிய விதம் மொத்த அணிக்கும் மகிழ்ச்சி: நாடு திரும்பிய ரிஷாப் பண்ட் பேட்டி....!!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரை கைப்பற்றியது.  3 போட்டிகளில் ஒரு போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், மற்ற இரு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி தொடர் இருந்த சூழலில் வெற்றியை முடிவு செய்யும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.

பிரிஸ்பேன் நகரில் நடந்த இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. இந்தப்போட்டியில் 2-வது இன்னிங்சில் சிறந்த முறையில் விளையாடிய ரிஷாப் பண்ட், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த டெஸ்டில் 89 ரன் விளாசி 328 ரன் இலக்கை எட்டுவதற்கு வித்திட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 13 இடங்கள் முன்னேறி ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் 13-வது இடத்துக்கு (691 புள்ளி) வந்துள்ளார்.

இந்நிலையில், கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.  டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரிஷாப் பண்ட் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், கோப்பையை தக்க வைத்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மொத்த அணிக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Mass Mano Creation
Top