Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

Minnambalam 2 years ago

மிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்தவகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தோட்டக்கலைத்துறை இயக்குனராக இருந்த பிருந்தா தேவி, சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

உயர்கல்வித்துறை துணை செயலாளராக இருந்த தர்பகராஜ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த அருண் ராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக இருந்த கமல் கிஷோர், தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த சுப்புலெட்சுமி, வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த முருகேஷ், வேளாண் துறை இயக்குனராக நியமனம்.

வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தோட்டக்கலை இயக்குனராக நியமனம்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக லெட்சுமி நியமனம்.

வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் வணிகத்துறை முதன்மை செயலாளராக பிரகாஷ் நியமனம்.

செல்வம்

பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம்: நிரந்தரத் தீர்வு உண்டா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam