Dailyhunt
ஆதரவு கேட்டு விஜய் கடிதம்.. விசிகவின் நாளைய உயர்நிலைக் கூட்டம் திடீர் ரத்து!

ஆதரவு கேட்டு விஜய் கடிதம்.. விசிகவின் நாளைய உயர்நிலைக் கூட்டம் திடீர் ரத்து!

Minnambalam 1 week ago

மிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதியது தொடர்பாக ஆலோசிக்க நாளை நடைபெறுவதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவெகவுக்கு சட்டசபை தேர்தலில் 108 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

தற்போதைய நிலையில் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவை தவெக பெற்றுள்ளது மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த கடிதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க விசிகவின் உயர்நிலைக் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது, விசிகவின் நாளைய உயர்நிலைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam