Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!

ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!

Minnambalam 2 years ago

வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை தினம்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கும் உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ரிஷிகேஷ்ராய் தலைமையிலான அமர்வு வழக்கை ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

செல்வம்

மயிலாடுதுறை: போக்கு காட்டும் சிறுத்தை… தேடுதல் வேட்டையில் வனத்துறை!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய முக்கிய மெசேஜ்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam