Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமலாக்கத் துறை வழக்கு ரத்து: தனியார் கட்டுமான நிறுவன வழக்கில் முக்கிய உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கு ரத்து: தனியார் கட்டுமான நிறுவன வழக்கில் முக்கிய உத்தரவு!

Minnambalam 2 years ago

னியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 5) ரத்து செய்தது.

சென்னையில் ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எஸ்.கே.பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தனக்கு வர வேண்டிய பங்கை பீட்டர் தரமறுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீராம் மனுத் தாக்கல் செய்தார். அதன்படி பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே 50 கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பீட்டர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அந்த சோதனையின் அடிப்படையில் பீட்டர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து ஆவணங்களுடன் ஆஜராகுமாறு பீட்டருக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் சார்பில், "நிறுவனத்துக்கு எதிராக போலீஸ் பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. எனவே அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தொடர முடியாது" என்று வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன், "மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி, மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர். அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, ஒருவேளை மத்திய குற்றப்பிரிவினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால் அமலாக்கத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனுதாரர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 4 வாரங்களில் திருப்பி கொடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரியா

IPL 2024: 'அது ஒரு ஆக்சிடென்ட்'… பஞ்சாப்பிற்கு எதிராக தெறிக்கும் மீம்ஸ்கள்!

2021 தேர்தலிலும் இதே இவிஎம் மெஷின் தான்… திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் வாதம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam