Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

Minnambalam 2 years ago

மலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 23) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்றைய தினம் இரவே ஆம் ஆத்மி கட்சி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 22-ஆம் தேதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்த இருந்ததால், வழக்கை வாபஸ் பெற்றனர்.

இதனைதொடர்ந்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் 10 நாட்கள் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடி வழங்கி நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.

இந்தநிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த வழக்கை நாளைக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

செல்வம்

Mobile Phone: ரியல்மீ -க்கு போட்டியாக களமிறங்கிய விவோ… சிறப்பம்சங்கள் என்ன?

நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்: பின்னணி இதுதான்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam