Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்"  : செல்லூர் ராஜூ விமர்சனம்!

"அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்" : செல்லூர் ராஜூ விமர்சனம்!

Minnambalam 2 years ago

ரோட் ஷோ என்று அழைத்து வந்து பிரதமரை ஒன்னுமில்லாமல் அண்ணாமலை ஆக்கி விட்டார் என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (ஏப்ரல் 13) வாக்கு சேகரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "மதுரையில் 25 ஆயிரம் வட இந்தியர் குடும்பம் உள்ளது‌. அவர்களிடம் வாக்கு சேகரித்தோம்‌. அப்போது அதிமுக ஆட்சியில் தான் வட இந்தியர்கள் நிம்மதியாக தொழில் பண்ணினோம் என்றனர்.

மத்தியில் மோடி வந்தாலும் தமிழ் நாட்டில் அதிமுக தான் வர வேண்டும் என்று கூறி ஆதரவு கொடுப்பதாக கூறினார்கள்.

அமித்ஷா எங்களை பற்றி குறை சொல்லவில்லை!

மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழர்கள் தனித்துவம் பெற்றதன் அடிப்படையில் அண்ணா 'தமிழ்நாடு' என்று பெயர் வைத்தார். திமுக, அதிமுக என்ற திராவிட இயக்கங்கள் இங்கு ஆட்சி செய்து வருகிறது. திராவிட இயக்கம் தான் ஏழை எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்கள் தான் பின்னர் நாடு முழுவதும் கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து வாங்கும் நிதியில் தான் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் சிறுகுறு தொழிலில் முதலிடமும், பெரு நிறுவனங்கள் தொழிலில் இரண்டாமிடமும் தமிழ்நாடு வகிக்கிறது.

தேர்தலுக்காக தமிழ்நாட்டில் ஊழல் நடப்பதாக அமித்ஷா பேசியுள்ளார். இதைக்காட்டிலும் ஊழல் மத்திய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

திமுக தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி. அதிமுக ஆட்சியை யாரும் குற்றம் சொல்லவில்லை.

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்களை விமர்சிக்கும் அண்ணாமலையின் மறுபிறவியாக அமித்ஷா பேசி சென்றுள்ளார்.

அமித்ஷா உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. திமுக- வை தான் சொல்ல வேண்டும். ஆனால் மாற்றி சொல்லி விட்டார்.

அண்ணமலை என்ன ஜோசியரா?

எங்கள் கட்சி அழிந்து போய் விடும் என்று சொல்வதற்கு அண்ணாமலை என்ன ஜோசியரா? இல்லை விஷ்வாமித்திரரா? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ பேரை பார்த்து பல சோதனைகளை கடந்து வந்துள்ளது.

அண்ணாமலை கூற்று என்பது வேடிக்கையானது, நகைச்சுவையானது, அவர் நகைச்சுவையாக மாறிவிட்டார்.

அண்ணாமலைக்கு தோல்வி பயம். அதனால் இதுபோன்று பேசி பார்க்கிறார். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பேசுவார்? தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை எங்கு இருப்பார் என்று தெரியாது?

"ரோட் ஷோ" என்று பிரதமரை அழைத்து வந்து அண்ணாமலை பிரதமரின் செல்வாக்கை ஒன்னுமில்லாமல் ஆக்கி விட்டார். இதனால் மோடி நிச்சயம் வருத்தத்தில் இருப்பார்

அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை ஒன்றும் பண்ண முடியாது. இந்த அண்ணாமலை ஜுஜுபி. அண்ணாமலையை ஏற்கெனவே கிழிகிழினு கிழித்துவிட்டேன்" என்று செல்லூர் ராஜூ பேசினார்.

ராமலிங்கம்

எடப்பாடியின் பாதகச் செயல்கள் : பட்டியலிட்டு திமுக அட்டாக்!

வெடித்தது சர்ச்சை… பிவிஆர்-ஐநாக்ஸ் எதிராக 'ஆடுஜீவிதம்' இயக்குநர் போராட்டம்?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam