மிருணாள் தாகூரின் கண்கள், உதடு, மூக்கு அமைந்த விதத்தில் ஏதோ இருக்கிறது என, நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா - மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 5) வெளியாகிறது. மிடில் கிளாஸ் பையனாக விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் கல்லூரி மாணவியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.
இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மிருணாளுடன் நடித்தது குறித்து மனந்திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், "நான் சினிமா குறித்து கனவு காண்பதற்கு முன்பே மிருணாள் தாகூர் நடிக்க வந்துவிட்டார்.
உங்களுக்கு அருமையான முகம் என நான் மீண்டும், மீண்டும் அவரிடம் கூறி வருகிறேன். தன்னுடைய இளம்வயதிலேயே அவர் திரையுலகில் நுழைந்து விட்டார். அதிகம் அவர் பேசாவிட்டாலும், மொழி புரியாவிட்டாலும் நம்மால் அவரின் எமோஷனல்களை உணர முடியும்.

