Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு' : ராகுல் காந்தி வாக்குறுதி!

'அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு' : ராகுல் காந்தி வாக்குறுதி!

Minnambalam 2 years ago

பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் உறுதி செய்யும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பாதி ஆட்சேர்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நாங்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறோம்.

பாதுகாப்பான வருமானம், எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தினை பலமாக மாற்றுவார்கள்.

50% அரசுப் பதவிகளில் பெண்களை வைத்திருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும், சக்திவாய்ந்த பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam