Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசு ஊழியர்களின் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி தாக்கு!

அரசு ஊழியர்களின் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி தாக்கு!

Minnambalam 2 years ago

ரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 9) குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்காக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாட்டுத்தாவணி காய்கறி, பழ சந்தைகளில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தோம். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஸ்டாலின், அதை நடைமுறைப்படுத்தவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கையை 3 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இப்போது தேர்தல் வந்தவுடன் ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கிறார்.

திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.

ஜெயலலிதா குறித்து ராஜ்நாத் சிங் புகழ்வது மகிழ்ச்சி. எதிரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லது செய்தால் பாராட்டுவது இயல்பு. மறைந்த தலைவர்களை பாராட்டுவது மரபு.

திமுக கார்பரேட் கம்பெனி. அதிமுகவில் நான் ஒரு தொண்டன், தலைவன் அல்ல. அதிமுகவில் 100% வாரிசு அரசியல் இல்லை. எனக்கு பின்னால் யாரோ ஒரு தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார். ஆனால் திமுகவில் அப்படியல்ல. திமுக கட்சியை ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து நடத்தி கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் என்பது கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார் வருகிறார் என்பதை பொறுத்தது. தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது" என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam